தரவரிசையில் 32ஆம் இடத்திலுள்ள கஸக்ஸ்தானை இலங்கை வென்றது

0 40

ஈரானின் தெஹ்­ரானில் நடை­பெற்­று­வரும் ஆசிய சிரேஷ்ட ஆண்கள் கரப்­பந்­தாட்டப் போட்­டியில் இலங்கை தனது முத­லா­வது வெற்­றியை நேற்­று­முன்­தினம் பதிவு செய்­தது.

ஏ குழுவில் தனது மூன்று லீக் போட்­டி­க­ளிலும் ஈரான், அவுஸ்­தி­ரே­லியா, கத்தார் ஆகிய அணி­க­ளிடம் தோல்வி அடைந்த இலங்கை, நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற தர­வ­ரி­சைப்­ப­டுத்தல் போட்­டியில் கஸ்­கஸ்­தானை 3 க்கு 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டது.

இரண்டு அணி­களும் கடு­மை­யாக மோதிக்­கொண்ட இப் போட்­டியில் 35 க்கு 33, 22 க்கு 25, 25 க்கு 20, 25 க்கு 22 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் இலங்கை வெற்­றி­பெற்­றது.

முதல் சுற்றில் ஏ குழுவில் கடைசி இடத்தைப் பெற்ற இலங்கை உட்­பட 8 அணிகள் 9ஆம் இடத்­தி­லி­ருந்து 16ஆம் இடம்­வ­ரை­யான தரப்­ப­டுத்­த­லுக்­கான சுற்றில் விளை­யாடி வரு­கின்­றன.

ஆண்­க­ளுக்­கான உலக கரப்­பந்­தாட்ட தர­வ­ரி­சையில் 39ஆம் இடத்தை வகிப்­பதும் 2017ஆம் ஆண்டு ஆசிய கரப்­பந்­தாட்­டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்­ற­து­மான கஸக்ஸ்­தானை 131ஆம் இடத்­தி­லுள்ள இலங்கை வெற்­றி­கொண்­டுள்­ளமை பாராட்டுக்குரியதாகும். இலங்கை இன்றைய தினம் ஓமானை எதிர்த்தாடவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!