பாகிஸ்தான் உத்தேச கிரிக்கெட் குழாம்

0 251

இலங்கைக்கு எதிரான உறுதிப்படுத்தப்படாத மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தானின் உத்தேச கிரிக்கெட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர்களான அஹ்மத் ஷேஹ்ஸாத், உமர் அக்மால் ஆகியோரை பாகிஸ்தானின் தலைமைத் தெரிவாளர் மிஸ்பா உல் ஹக் இணைத்துக்கொண்டுள்ளார்.

இந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்களையும் முன்னைய தேர்வுக் குழுவினர் கருத்தில் கொள்ளாததுடன் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்கும் அவர்களைத் தெரிவு செய்திருக்கவில்லை.

கெரிபியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு சிரேஷ்ட வீரர்களான மொஹம்மத் ஹபீஸ், ஷொயெப் மாலிக் ஆகிய இருவருக்கும் அக்டோபர் 12ஆம் திகதிவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் இருவரும் குழாத்தில் இடம்பெறவில்லை.

பாகிஸ்தானின் உத்தேச கிரிக்கெட் குழாம்
சர்ப்ராஸ் நவாஸ் (அணித் தலைவர்), பாபர் அஸாம் (உதவி அணித் தலைவர்), அபிட் அலி, பாஹிம் அஷ்ரப், அஹ்மத் ஷேஹ்ஸாத், அசிப் அலி, பக்கார் ஸமான், ஹரிஸ் சொஹெய்ல். ஹசன் அலி, இப்திகார் அஹ்மத், இமாத் வசிம், இமாம் உல் ஹக், மொஹமத் ஆமிர், மொஹமத் ஹஸ்னெய்ன், மொஹமத் நவாஸ், மொஹமத் ரிஸ்வான், ஷதாப் கான், உமர் அக்மால், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!