பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைவரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை மீளாய்வு செய்யும்

0 223

இலங்­கைக்கு எதி­ராக செப்­டெம்பர் 27ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள கிரிக்கெட் தொட­ருக்­கான மத்­தி­யஸ்­தர்­களை நிய­மிப்­ப­தற்கு முன்னர் பாகிஸ்­தானில் பாது­காப்பு நிலை­வரம் குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை மீளாய்வு செய்­ய­வுள்­ள­தாக அந் நாட்டுத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

பாகிஸ்­தானில் வெளி­யாகும் நாளிதழ் ஒன்றின் தக­வல்­க­ளுக்கு அமைய, பாகிஸ்தான் அர­சினால் சமர்ப்­பிக்­கப்­படும் பாது­காப்பு தொடர்­பான ஏற்­பா­டு­களை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை மீளாய்வு செய்­ய­வுள்­ளது.

பாது­காப்பு ஏற்­பா­டுகள் திருப்தி அளிக்கும் பட்­சத்­தி­லேயே நடு­நி­லை­யான மத்­தி­யஸ்­தர்­களை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை நிய­மிக்கும் என அந்த தக­வலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தா­னுக்கும் ஸிம்­பாப்வேக்கும் இடையில் கடை­சி­யாக பாகிஸ்­தானில் 2015இல் நடை­பெற்ற கிரிக்கெட் தொட­ருக்கு நடு­நி­லை­யான மத்­தி­யஸ்­தர்­களை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை நிய­மிக்­க­வில்லை.

மாறாக, இரண்டு நாடு­க­ளி­னதும் கிரிக்கெட் சபை­களின் இணக்­கப்­பாட்­டு­ட­னேயே கிரிக்கெட் விட­யங்கள் கையா­ளப்­பட்­டன.

இதனைப் பின்­பற்றி மத்­தி­யஸ்­தர்­களை தங்கள் விருப்­பப்­படி நிய­மித்­துக்­கொள்­ளு­மாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை­யி­ன­ரையும் ஸ்ரீலங்கா கிரிக்­கெட நிரு­வாக உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை கோரு­வ­தற்­கான வாய்ப்பும் இருக்­கவே செய்­கின்­றது.

மூன்று போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ரிலும் 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ரிலும் இரண்டு நாடு­களும் விளை­யாடும் வகையில் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்­டெம்பர் 27, 29, அக்­டோபர் 2ஆம் திக­தி­களில் கராச்­சியில் நடை­பெ­ற­வுள்­ளது. அதனைத் தொடர்ந்து சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் லாகூரில் அக்­டோபர் 5, 7, 9ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

எவ்­வா­றா­யினும் இலங்கை அணிக்கு பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக நம்­ப­க­ர­மான தகவல் கிடைத்­துள்­ள­தாக இலங்கை பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­ததை அடுத்து இலங்கை பாகிஸ்தான் செல்வது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

இதனை அடுத்து பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் குறித்து மீளா ய்வு செய்ய வேண்டியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்து.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!