தொழில்­நுட்ப பாது­காப்பு முறைமை இல்­லாத போலி­யான விசாக்கள் மூலம் நாட்­டி­லி­ருந்து வெளி­யேற முயன்ற ஈராக் பிர­ஜை­க­ளான தந்தை,மகன் கைது!

தெளி­வற்ற விமான பயண மார்க்­க­ங்கள் குறிப்­பி­டப்­பட்ட விமானச் சீட்­டுக்கள் இரண்டும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன!

0 88

(ரெ.கிறிஷ்­ணகாந்)

போலி­யாகத் தயா­ரிக்­கப்­பட்ட விசாவைப் பயன்­ப­டுத்தி இலங்கை ஊடாக ஜப்­பா­னுக்கும், அங்­கி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் சட்­ட­வி­ரோ­த­மாகச் செல்ல முயன்ற ஈரான் பிர­ஜை­க­ளான தந்­தையும் மகனும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் வெளி­யேறும் பகு­தி­யி­லுள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சந்­தேக நப­ரான 51 வய­தான தந்தை ஈரானில் பூக்கள் சார்ந்த வர்த்­த­கத்தை மேற்­கொள்­பவர் என்றும், 15 வய­தான அவ­ரது மகன் அந்­நாட்டில் கல்வி கற்­று­வ­ரு­பவர் என்றும் தெரிய வந்­துள்­ளது.

இவ்­வி­ரு­வரும் கடந்த 14 ஆம் திகதி இலங்கை வந்­துள்ள நிலையில், கடந்த 16 ஆம் திகதி இரவு 7.30 மணி­ய­ளவில் ஜப்­பானின் நொரிடா விமான நிலையம் நோக்கிச் செல்­வ­தற்­காக கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு வந்­துள்­ளனர்.

இவ்­வி­ரு­வரும் விமான நிலை­யத்தின் குடி­ய­கல்வு கரு­ம­பீ­டத்­துக்கு அவர்­களால் வழங்­கப்­பட்ட விசா அனு­ம­திப்­பத்­தி­ரத்தில் வித்­தி­யாசம் காணப்­பட்­டதால் அங்­கி­ருந்த அதி­காரி, அவ்­வி­ரு­வ­ரையும் பிர­தம குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­கா­ரி­யிடம் அனுப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

அதன்­போது, இந்த விசா விமான நிலை­யத்­தி­லுள்ள தேச எல்லை பாது­காப்பு பிரிவு அதி­கா­ரி­க­ளிடம் அனுப்­பப்­பட்ட நிலையில், அதன்­போது மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னையில், குறித்த விசாக்­களில் இருக்­க­வேண்­டிய தொழில்­நுட்ப பாது­காப்பு முறைமை இந்த விசாவில் உள்­ள­டங்­கி­யி­ருக்­கா­ததால் அது போலி­யா­னது எனக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், அவர்­க­ளது பய­ணப்­பை­களை சோத­னை­யிட்­ட­போது, தெளி­வற்ற விமான பயண மார்க்­கங்கள் குறிப்­பி­டப்­பட்ட விமானச் சீட்­டுகள் இரண்டும் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வி­ரு­வரும், ஜப்­பா­னி­லுள்ள தமது நண்­பரின் மூல­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குச் செல்­வ­தற்­காக இவ்­வாறு இலங்கை வந்­துள்­ள­தா­கவும், இதற்­காக ஈரானைச் சேர்ந்த இடைத் தர­க­ரொ­ரு­வ­ருக்கு 75 இலட்சம் ரூபா பணத்தை செலுத்­தி­யுள்­ள­தாக குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­கா­ரி­களின் விசா­ரணைகளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த கைது மற்றும் இது குறித்த மேல­திக விசா­ர­ணை­களை கட்­டு­நா­யக்க விமான நிலைய குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் உதவிக் கட்­டுப்­பாட்­டாளர் சுஜீவ ரத்­னா­யக்­கவின் அறி­வு­றுத்தல் மற்றும் கண்­கா­ணிப்பின் கீழ் பிர­தம குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­காரி சீ. அழ­கக்கோன், ஏனைய அதி­கா­ரி­க­ளான கே.கே.ஜி.எஸ். பண்­டார, எம்.ஏ. சந்­த­ருவன், என்.எஸ். கரு­ணா­ரத்ன, ஐ. நிலந்தி மற்றும் உஜினி குண­தி­லக்க ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர், ஈரான் பிரஜைகளான இவ்விருவரும் ஆட்கடத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை கட்டுநாயக்க விமான நிலைய குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.(கபில்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!