மும்பை வீதியில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட ஆட்டோசாரதி, பெண்ணொருவர் பிடித்த படங்களால் சிக்கினார்

0 918

வீதியில் செல்லும் பெண்கள் முன்னிலையில் பாலியல் சுய இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த ஆட்டோ சாரதி ஒருவரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராம் நரேஷ் யாதவ் என்பவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணொருவர் வெளியிட்ட புகைப்பட ஆதாரமொன்றையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் மாலாட் பகுதியில் பெண்கள் முன்னிலையில் மேற்படி நபர் சுயஇன்பத்தில் ஈடுபடுவதை பெண்ணொருவர் படம்பிடித்து மும்பை பொலிஸாரின் டுவிட்டர் மூலம் பகிர்ந்தார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிpவத்துள்ளார்.

ராம் நரேஷ் யாதவ் மறுநாளும் பாலியல் நடவடிக்கையல் ஈடுபட்டபோது, முச்சக்கர வாகனத்தின் இலக்தக்தையும் அப்பெண் படம்பிடித்து பொலிஸாரிடம் பகிர்ந்தார்.

இதையடுத்து, குறித்த ஆட்டோ சாரதியை தாம் கைது செய்துள்ளதாக மேற்படி பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!