என்ஜின் தீப்­பற்­றி­யதால் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்ட விமானம்

0 38

சவூதி அரே­பி­யாவை நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த பய­ணிகள் விமா­ன­மொன்று தீப்­பி­டித்­ததால் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம் பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது. அவ்­வி­மா­னத்­தி­லிருந்த சுமார் 130 பய­ணி­களும் ஊழி­யர்களும் உயிர் தப்­பி­னர்.

பாகிஸ்­தானின் தேசிய விமான சேவை­யான பாகிஸ்தான் இன்­டர்நெஷனல் எயார்வேஸ் (பி.ஐ.ஏ.) நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பி.கே. 759 எனும் விமானம் கடந்த ஞாயி­றன்று லாகூ­ரி­லி­ருந்து சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரை நோக்கிப் புறப்­பட்­டது.

போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த இவ்­வி­மா­னத்தில் 130 இற்கும் அதி­க­மான பய­ணிகள் இருந்­த­னர் என பாகிஸ்தான் ஊட­கங்கள் தெரி­வித்­தன.

இவ்­வி­மானம் பறந்­து­கொண்­டி­ருந்த போது தீ பர­ வி­ய­மைக்­கான எச்­ச­ரிக்கை ஒலித்­தது. இதை­ய­டுத்து இவ்­வி­மானம் திசை திருப்­பப்­பட்டு, லாகூரின் அல்­லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் அவ­ச­ர­மாகத் தரை­யி­றக்­கப்­பட்­டது.

இவ்­வி­மா­னத்தின் என்­ஜினில் தீப்பற்றியமை கண்டறியப்பட்டது. அதையடுத்து மற்றொரு விமானத்தில் பயணிகள் ஜெத்தாவுக்கு அனுப்பப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!