பயங்கரவாதி ஸஹ்ரானின் சகா கல்முனை ஷியாமின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள்!

0 418

                                                                                                                        (எம்.ஏ.றமீஸ்)
பயங்கரவாதி ஸஹ்ரானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட குண்டுகள் தயாரிக்கும் வெடிபொருட்களையும்   மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸஹ்ரானின்  கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை ஷியாமிடமிருந்து பெறப்பட்ட  தகவல்களை  அடிப்படையாகக் கொண்டு இன்று (18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இவை மீட்கப்பட்டதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் அம்பாறை மாவட்ட பிரதம செயற்பாட்டாளரான ஷியாமின்  உறவினர் ஒருவரின் காணி அமைந்துள்ள பாலமுனை-06  உதுமாபுரம்  பகுதியிலேயே   இவை  மீட்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!