கம்­பியில் பய­ணித்த மோட்­டார் சைக்­கிளில் தொங்­கி­ய­வாறு திரு­மணம் செய்­து­கொண்ட சாகச வீராங்­கனை

0 438

ஜேர்மனியைச் சேர்ந்த சாகச வீராங்­க­னை­யொ­ரு­வர், கம்­பியில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த மோட்­டார் சைக்­கிளில் தொங்­கிய நிலையில் திரு­மணம் செய்­துள்­ளார்.

 

33 வய­தான அனா ட்ராபர் எனும் யுவ­தியே இவ்­வாறு விநோ­த­மாக திரு­மணம் செய்­து­கொண்­டார்.  ஜேர்மனியின் பிரெசாக் நகரில் கடந்த சனிக்­கி­ழமை இத்­தி­ரு­மணம் நடை­பெற்­றது.

அனா ட்ரபாரின் குடும்­பமும் சாகசக் கலை­ஞர்களைக் கொண்­ட­துதான்.

இந்­நி­லையில், ஸ்வென் லீயர் என்­ப­வரை அனா ட்ராபர் திரு­மணம் செய்­து­கொண்­டார். 

மண­ம­களின் தந்­தை­யான ஜொஹான் ட்ராபர், கம்­பி­யொன்றின் மீது மோட்­டார் சைக்­கிளை செலுத்­தி­னார்.

அதன்கீழ் மண­மக்கள் தொங்­கி­ய­வாறு காணப்­பட்­ட­னர்.

மற்­றொரு மோட்­டார் சைக்­கிளில் பாதி­ரி­யார் பய­ணித்­தார்.

பெரும் எண்ணிக்கையான மக்கள் இத்திருமணத்தைக் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!