தமிழ் சினிமாவில் யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை – யாஷிகா ஆனந்த்

0 140

”தமிழ் சினிமாவில் ”எனக்கு யாரை­யும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை”, என யாஷிகா தெரிவித்துள்ளார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரப­லமா­னவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

பின்னர் ‘பிக் பொஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.

அந்த சீசனில் டைட்­டில் வின்னராக வரும் அளவிற்கு அவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது.

பிக் ெபாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

ஆரவ்வுடன் ‘ராஜபீமா’, மகத்துடன் ‘உத்தமன்’ ஆகிய படங்கள் தவிர, அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜாம்பி’.

தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்­களில் தனது கவர்ச்சிப் படங்களைப் பதிவேற்றி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இ­ந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,  தன்னுடன் வயதில் சிறிய பையனுடன் டேட்டிங் சென்றதாகக் கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் யாஷிகா.

இது குறித்து அவர் கூறுகையில், “பசங்க என்னை இம்பிரஸ் செய்ய வேண்டுமானால் நல்ல பர்ஃப்யூம் போட்டிருக்க வேண்டும்.

நல்ல உயரமாக இருக்க வேண்டும். தாடி இருக்க வேண்டும். டாட்டூஸ் போட்டிருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

என்னைவிட சின்ன பையனை டேட் செய்திருக்கி­றேன். நான் பள்ளியில் 12 ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது 9 ஆம் வகுப்பு மாணவர் ஒருவருடன் டேட்டிங் சென்றேன். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நான் காலையில் லேட்டாக தான் எழுவேன். பிறகு குளித்து கிளம்புவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்வேன்.

காலையில் குளிப்ப­தென்றால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் இரவு நேர படப்பிடிப்பை தான் பெரும்பாலும் விரும்புவேன்.

எனக்கு விஜய் தேவரகொண்டாவை மிக­வும் பிடிக்கும். தெலுங்கு சினிமா உல­­­கில் இருந்து யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் எனக் கேட்டால் அவரைத்தான் சொல்வேன். தமிழ் சினி­மாவில் எனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை”, என யாஷிகா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!