70 கிலோ எடை தூக்கும் அலியா பட்

0 130

உடற்கட்டை பிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நடிகைகளிடம் அதிகரித்திருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

அந்த பட்டியலில் நடிகை அலியாபட் இணைந்திருக்கிறார். பாகுபலி படத்தையடுத்து ராஜமௌலி இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ சரித்திர படம் உருவாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் எ.ன்டி.ஆர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியா பட் அறிமுகமாக உள்ளார்.

பாகுபலியில் பிரபாஸ், ராணா போன்றவர்கள் கதாபாத்­திரங்களுக்கு ஏற்ப உடற்கட்டை சிக்ஸ்பேக் தோற்றத்துடன் கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டனர்.

அதற்காக கடுமையான பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.அதேபோல் தற்போது நடிக்கும் ராம் சரண், ஜூனியர் என்.டி. ஆரும் கடுமையான பயிற்சிகள் மூலம் உடற்கட்டை கட்டுமஸ்தாக்கியிருக்கின்றனர்.

இவர்களுடன் நடிக்கும் அலியாபட்டும் எக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதால் அவரையும் உடலை பிட்டாக வைத்துக்கொள்ளச் சொல்லி இயக்குநர் அட்வைஸ் தந்திருந்தார்.

அதை ஏற்று கடந்த சில மாதங்களாக கடுமையான பயிற்சிகளில் அலியா பட் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் 70 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்த வீடியோவை அவர் வெளியிட்டார்.

இதுபற்றி அவரது பயிற்சியாளர் கூறும்போது, ‘இந்த வருட தொடக்கத்தில் தான் அலியாபட் ஜிம்மிற்கு வரத் தொடங்கினார்.

தொடக்கத்தில் வெயிட் லிஃப்ட் செய்வதற்கு தயக்கம் காட்டுவார்.

தற்போது அதில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

அவர் முன் எவ்வளவு எடையை வைத்தாலும் அதைக் கண்டு பின்வாங்காமல் தூக்க முயற்சிக்கிறார்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!