பேஸ்புக்கிலிருந்து 2 வருடங்களில் 26 மில்லியன் பயங்கரவாத பதிவுகள் நீக்கம்

0 447

ஐ.எஸ். மற்றும் அல்கைதா அமைப்புகளுடன் தொடர்புடைய 26 மில்லியன் (2.6 கோ) பய்கரவாத பதிவுகள் பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 வருடங்களில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் 26 மில்லியன் (2.6 கோடி) பதிவுகளை பேஸ்புக்கிலிருந்து அகற்றியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் எனும் தானியங்கி மென்பொருள் மூலம் இப்பதிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பேஸ்புக் விடுத்த அறிக்கையொன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஐ.எஸ். மற்றும் அல் கைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை புகழும் 26 மில்லியன் பதிவுகள் 2 வருடங்களில் அகற்றப்பட்டுள்ளன.

ஆவற்றில் 99 சதவீதமன பதிவுகள் எவ்வித எந்தவித முறைப்பாடுகளும் கிடைப்பதற்கு முன்னரே, கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்ட என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

அதேவேளை, 200 வெள்ளை இன மேலாதிக்கவாதி அமைப்புகளும் பேஸ்புக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!