அகில இலங்கை பாடசாலைகள் தொடர் ஓட்ட விழா குருணாகலிலிருந்து சுகததாச அரங்குக்கு மாற்றம்

0 28

(நெவில் அன்­தனி)

கல்வி அமைச்சின் ஏற்­பாட்டில் குரு­ணாகல் வெல­கெ­தர விளை­யாட்­ட­ரங்கில் இம் மாதம் 20, 21, 22ஆம் திக­தி­களில் நடத்­தப்­ப­ட­வி­ருந்த அகில இலங்கை பாட­சா­லைகள் தொடர் ஓட்ட விழா (ரிலே கார்­னிவல்) கொழும்பு சுக­ததாச விளை­யாட்­ட­ரங்­குக்கு இடம் மாற்­றப்­பட்­டுள்­ளது.

குரு­ணா­கலில் நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக அகில இலங்கை பாட­சா­லைகள் தொடர் ஓட்ட விழாவை கொழும்பு சுக­த­தாச அரங்கில் இம் மாதம் 20, 21, 22ஆம் திக­தி­களில் நடத்த தீர்­மா­னித்­த­தாக கல்வி அமைச்சின் விளை­யாட்­டுத்­துறை உதவிப் பணிப்­பாளர் ருவன் பத்­தி­ரண தெரி­வித்தார்.

தொடர் ஓட்ட விழாவில் பங்­கு­பற்ற விண்­ணப்­பித்­தி­ருக்கும் பாட­சா­லை­களின் பொறுப்­பா­சி­ரி­யர்கள் தமது மாண­வர்­களை கொழும்பு 14, கிராண்ட்பாஸ் புனித ஜோசப் ஆண்கள் பாட­சா­லைக்கும், மாண­வி­களை புனித ஜோசப் பெண்கள் பாட­சா­லைக்கும் 19ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 4.00 மணிக்கு முன்னர் அழைத்­து­வ­ரு­மாறு கோரப்­பட்­டுள்­ளனர். அங்­கி­ருந்து மாண­வர்­களும் மாண­வி­களும் கல்வி அமைச்சு அதி­கா­ரி­களால் உரிய பாட­சா­லை­க­ளுக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு தங்­க­வைக்­கப்­ப­டுவர்.

தொடர் ஓட்ட விழாவில் மத்­தி­யஸ்தம் வகிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள அனை­வரும் கொழும்பு சுக­த­தாச ஹோட்­ட­லுக்கு 19ஆம் திகதி பிற்­பகல் 3.00 மணிக்கு முன்னர் வருகை தரு­மாறு கோரப்­பட்­டுள்­ளனர்.

இவ் வருடப் போட்­டி­களில் 350க்கும் மேற்­பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாட­சா­லை­களைச் சேர்ந்த 10,000க்கு மேற்பட்ட மாணவ, மாண­விகள் பங்­கு­பற்­றுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 12, 14, 16, 18, 20 ஆகிய வய­து­க­ளுக்­குட்­பட்ட இரு­பா­லா­ருக்கும் தொடர் ஓட்டப் போட்­டிகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

மேலதிக விபரங்களுக்கு கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை உதவிப் பணிப்பாளர் ருவன் பத்திரணவை 071 8470905 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!