அம்பாறை மாவட்ட பூப்பந்தாட்டத்தில் புஷ்பாஞ்சலி, அஸான் சம்பியனாகினர்

0 173

(காரை­தீவு நிருபர் சகா)

உலகத் தமிழர் பூப்­பந்­தாட்ட (பட்­மின்டன்) பேர­வை­யினால் கல்­முனை வை.எவ்.சி. உள்­ளக அரங்கில் இவ் வருடம் நடத்­தப்­பட்ட அம்­பாறை மாவட்­டத்­துக்­கான பூப்­பந்­தாட்டப் போட்­டியின் பகி­ரங்க பெண்கள் ஒற்­றையர் பிரிவில் காரைதீவைச் சேர்ந்த பி. புஷ்­பாஞ்­ச­லியும் பகி­ரங்க ஆண்கள் ஒற்­றையர் பிரிவில் சம்­மாந்­து­றையைச் சேர்ந்த ஏ.பி.எம். அஸானும் சம்­பி­ய­னா­கினர்.

பகி­ரங்க ஆண்கள் இரட்­டையர் பிரிவில் ஜிப்றி, அலாம் ஜோடி­யினர் சம்­பி­ய­னா­கினர். அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேசும் வீர, வீராங்­க­னைகள் இப் போட்­டியில் பங்­கு­பற்­றினர்.

பெண்­க­ளுக்­கான பகி­ரங்க ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் காரைதீவைச் சேர்ந்த மற்­றொரு வீராங்­க­னை­யான ஆர். கேது­ஜாவை எதிர்த்­தா­டிய புஷ்­பாஞ்­சலி 21–18, 21–19 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2 நேர் செட்­களில் வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னானார்.

ஆண்கள் ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் காரைதீவைச் சேர்ந்த பி. சுல­க்ஷனை சந்­தித்த சம்­மாந்­து­றையைச் செர்ந்த அஸான் 21–12, 21–16 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2 நேர் செட்­களில் வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னானார்.
ஆண்கள் இரட்­டையர் இறுதிப் போட்­டியில் சுலக்ஷன், வசந்த் ஜோடி­யினரை 2 நேர் செட்­களில் (21–16, 21–15) வெற்­றி­கொண்டு ஜிவ்றி, ஹபிம் ஜோடி­யினர் சம்­பி­ய­னா­கினர்.

காரை­தீவைச் சேர்ந்த இரு­வ­ருக்கு இடையில் நடை­பெற்ற 16 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் கே. விபி­ஷனை 2 நேர் செட்­களில் (21–19, 21–16) வெற்­றி­கொண்ட ரீ. யுகேஷன் சம்­பியன் பட்­டதை தன­தாக்­கிக்­கொண்டார்.

18 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் காரைதீவைச் சேர்ந்த வை. வர­னு­ஜனை 2 நேர் செட்­களில் வெற்றியீட்டிய (21 –18, 21–16) சம்­மாந்­து­றையைச் சேர்ந்த ஏ. எம். முபீஸ் சம்­பி­ய­னானார். மூன்று செட்­கள்­வரை நீடித்­ததும் மிகவும் விறு­வி­றுப்­பாக நடை­பெற்­ற­து­மான 40 வய­துக்கு மேற்­பட்ட ஆண்கள் ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் பி. கோகு­ல­ரா­யனை சந்­தித்த என்.

அருள்­நாதன் 2 –1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் (17–21, 21 – 17, 25 – 23) வெற்­றி­பெற்று சம்­பி­ய­னானார். இவர்கள் இரு­வரும் கல்­மு­னையைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். இதே­வேளை, உலகத் தமிழர் பூப்­பந்­தாட்ட பேர­வையின் 7ஆவது உலகத் தமிழர் பூப்­பந்­தாட்ட சுற்றுப் போட்டி சுவிட்­சர்­லாந்தில் நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் இப் போட்­டியில் இலங்­கை­யி­லி­ருந்து பலர் பங்­கு­பற்­று­வார்கள் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் பேர­வையின் இலங்­கைக்­கான பிர­தி ­நி­தியும் வட­மா­காண பூப்­பந்­தாட்டப் பயிற்­று­ந­ரு­மான தவ­ராசா கமலன் தெரி­வித்தார்.

பரி­ச­ளிப்பு வைப­வத்தில் தொடர்ந்து பேசிய கமலன், ‘‘இலங்­கையின் எட்டு மாவட்­டங்­களில் தமிழ் பேசும் வீரர்­களை இணைத்து வரு­டாந்தம் இப்­பூப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டி­யினை நடத்­தி­வ­ரு­கிறோம். உலகத் தமிழர் பூப்­பந்­தாட்டப் பேர­வையின் ஸ்தாபகர் கந்­தையா சிங்கம் உல­க­ளா­விய ரீதியில் இவ் விளை­யாட்டைப் பிர­ப­லப்­ப­டுத்தி தமிழ் பேசும் வீரர்­களை தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் பிர­கா­சிக்கச் செய்­ய­வேண்டும் என்ற உன்­னத நோக்கில் செயற்­பட்­டு­வ­ரு­கிறார்.

இதற்கு உலகத் தமிழர் பூப்­பந்­தாட்டப் பேர­வையின் ஒல்­லாந்து கிளை அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது. தற்­போது சிறி­பாலா தலை­வ­ரா­கவும் ரமேஷ் செய­லா­ள­ரா­கவும் சிறப்­பாக செயற்­பட்டு ­வ­ரு­கின்­றனர். பேர­வையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் வசந்தின் ஒத்துழைப்புடன் இம்முறை முதற் தடவையாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் வீரர்களை இணைத்து பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தினோம். மட்டக்களப்பு மாவட்டத்துக்கான போட்டி எதிர்வரும் 29ஆம், 30ஆம், திகதிகளில் நடத்தப்படும்’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!