இவ் வருட மகளிர் டென்னிஸ் சங்க போட்டிகளில் ப்ளிஸ்கோவாவுக்கு நான்காவது சம்பியன் பட்டம்

0 22

சீனாவின் ஸெங்ஸூ டென்னிஸ் அரங்கில் நடை­பெற்ற மகளிர் டென்னிஸ் சங்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் செச்­சியா வீராங்­கனை கரோ­லினா ப்ளிஸ்­கோவா சம்­பி­ய­னானார்.

இவ் வருடம் ப்ளிஸ்­கோவா வென்­றெ­டுத்த நான்­கா­வது மகளிர் டென்னிஸ் சங்க சம்­பியன் பட்டம் இது­வாகும். ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் குரோ­­ஷிய வீராங்­கனை பெட்ரா மார்­டிக்கை 2 நேர் செட்­களில் (6–3, 6–2) கரோ­லினா ப்ளிஸ்­கோவா இல­கு­வாக வெற்­றி­கொண்டு சம்­பியன் பட்­டத்தை சூடினார்.

இவ் வெற்­றியை 77 நிமி­டங்­களில் ப்ளிஸ்­கோவா வெற்­றி­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 26 வய­தான ப்ளிஸ்­கோவா இவ் வருடம் ப்றிஸ்பேன், ரோம், ஈஸ்ட்போர்ன் ஆகிய போட்­டி­க­ளிலும் சம்­பி­ய­னா­கி­யி­ருந்தார்.

தற்­போது உலக மகளிர் டென்னிஸ் தர­வ­ரி­சையில் இரண்டாம் இடத்­தி­லி­ருக்கும் ப்ளிஸ்­கோவா, முதலாம் இடத்­தி­லுள்ள அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி பார்ட்டியை நெருங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!