அதிவேக படகோட்ட சாதனை முயற்சியில் முன்னாள் உலக சம்பியன் பாபியோ பூட்ஸி உட்பட மூவர் பலி: வெனிஸ் நகரில் சம்பவம்

Three killed in Monte Carlo-Venice boat speed record attempt

0 136

அதிவேக படகோட்டத்தில் புதிய சாதனை படைக்கும் முயற்சியில் ஏற்பட்ட விபத்தினால் புகழ்பெற்ற முன்னாள் படகோட்டச் சம்பியனான இத்தாலியனின் பாபியோ பூட்ஸியும் மேலும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

76 வயதான பாபியோ பூட்ஸி 10 உலக சம்பியன் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொனாக்கோ இராச்சியத்தின் மொன்டே கார்லோ நகரிலிருந்து இத்தாலியின் வெனிஸ் நகரம் வரையான படகோட்டத்தில் புதிய சாதனை படைப்பதற்கு இவர்கள் முயற்சித்தனர்.

இந்நிலையில், வெனிஸ் நகரில் இப்படகோட்டத்தின் இறுதிக் கட்டத்தில் செயற்கை பவளப்பாறையொன்றின் மீது படகு மோதியது. இதனால், பாபியோ பூட்ஸியும் மேலும் இருவரும்  உயிரிழந்தனர். மற்றொரு இத்தாலிய படகோட்டி உயிர்தப்பினார்.

மணித்தியாலத்துக்கு 80 நொட்ஸ் (148 கிலோமீற்றர் வேகத்தில் இப்படகு சென்று கொண்டிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!