கல்முனையில் வீட்டை முற்றுகையிட்டபோது கஞ்சாவை அளந்து கொண்டிருந்த 2 பெண்கள்!

0 4,199

                                                                                        (பாறுக் ஷிஹான்)

கல்முனைத் தொகுதியின் கல்முனைக்குடியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் கைதான மூவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றனையடுத்து கல்முனை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட் ரவூப் பொலிஸ் கன்ஸ்டபிள்களான நவாஸ் (43404) கீர்த்தனன்( 6873) கவிதன் (92876) ஆகியோர் கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா வீதியில் பதுங்கியிருந்து அவ்வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை மடக்கிப் பிடித்து அதில் சென்ற  இளைஞரிடமிருந்து கஞ்சாவைக்  கைப்பற்றினர்.
இதனையடுத்து குறித்த இளைஞரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எல்.ஏ சூரிய பண்டாரவின் ஆலோசனைக்கமைய கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் கல்முனைக்குடியில்  சந்தேகத்துக்கிடமான வீடு ஒன்றை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியபோது  தராசு ஒன்றில் கேரள கஞ்சாவை அளவீடு செய்து கொண்டிருந்த நிலையில்  இரு பெண்களைக் கைது செய்ததுடன் 7 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.

கைதான மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு  இன்று (18) கல்முனை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!