ஐ.எஸ் தொடர்புடைய இலங்கை வலையமைப்பின் பிரதான நபர் கத்தாரில் கைதாகி தடுப்புக் காவலில்!

0 391

                                                                                                                                    (எம்.எப்.எம்.பஸீர்)
ஐ.எஸ்  பயங்கரவாத அமைப்புடன்  தொடர்புகளைப் பேணிய இலங்கையர்களின்  வலையமைப்பின்  பிரதான நபராக கருதப்படும் ஒருவரை  கத்தார் பொலிஸார் கைது செய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.

மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் எனும் சந்தேக நபரே இவ்வாறு  கத்தார் பொலிஸ் நிலையம் ஒன்றினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹம்மட் அன்வர் மொஹம்மட்  இன்சாப்புடன் தங்கியிருந்ததாக கூறப்படும்   மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹம்மட் றியாஸ் என்பவர் கத்தார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் தடுப்புக் காவல் விசாரணைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

 கடந்த  ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ள குறித்த நபரை சி.ஐ.டி. விமான நிலையத்தில் வைத்து கைது செய்து தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!