லைபீரிய பாடசாலை தீயினால்  26 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி!

0 112

லைபீரியாவில் பாடசாலைக் கட்டடமொன்று தீப்பற்றியதால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் பெய்னெஸ்விலே நகரில், மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்றும் பாடசாலையொன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளது. இத்தீயினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

26 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரழந்துள்ளனர் என லைபீரிய ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

இத்தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!