பாலியல் துஷ்பிரயோகம், சித்திரவதைக்குள்ளான 500 ஆண்கள், சிறார்கள் நைஜீரிய பொலிஸாரால் மீட்பு

Nigerian 'torture house': 500 Men and boys freed in Kaduna police raid

0 338

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஆண்கள் மற்றும் சிறுவர்களான 500 பேரை தாம் விடுவித்துள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவின் வட பகுதி நகரான கடுனாவில் உள்ள. மத பாடசாலை எனக் கருதப்படும் நிலையத்திலிருந்து 500 ஆண்களும் சிறார்களும் விடுவிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு 5 வயதுக்குட்பட்ட சிறார்களும் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். ஏன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் இடம்பெறுவதாக இரகசிய தகவல் ஒன்றையடுத்து மேற்படி நிலையம் முற்றுகையிடப்பட்டதாக பிபிசியிடம் பொலிஸ் அதிகாரி அலி ஜான்கா தெரிவித்துள்ளார்.

தாம் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதுடன், பட்டினி நிலையில் இருந்ததாகவும் இந்நிலையத்த்pல் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டடத்துக்கு வெளியே உள்ள பெயர் பலகை, படம் நைஜீரிய பொலிஸ்)


சிலர் பல வருடங்களாக இவ்வாறு கொடுமைபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். தான் 3 மாதங்கள் காலில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனனர் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் எனவும் பொலிஸ் அதிகாரி அலி ஜான்கா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!