15 வயதில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக டெமி மூர் தெரிவிப்பு; முன்னாள் கணவர் அஷ்டன் குட்சர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு

0 172

ஹொலி­வூட்டின் புகழ்­பெற்ற நடி­கைகளில் ஒரு­வ­ரான டெமி மூர், தான் 15 வயதில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

 அத்­துடன் தனது முன்னாள் கணவர் அஷ்டன் குட்சர் தன்னை மற்­றொரு பெண்­ணுடன் இணைந்து பாலியல் உறவு கொள்ள நிர்ப்­பந்­தித்த­தா­கவும் 56 வய­தான டெமி மூர் தெரி­வித்­துள்ளார்.

நடிகை டெமி மூர் 1980 களில் ஹொலி­வூட்டின் முன்­னிலை நடி­கைகளில் ஒரு­வ­ராக விளங்­கி­யவர்.

வசூலில் பெரு வெற்றி பெற்ற பல படங்­களில் நடித்­தவர் அவர்.

1996 ஆம் ஆண்டு ஸ்ரிப்டீஸ் எனும் திரைப்­ப­டத்தில் நடிப்­ப­தற்­காக 12.5 மில்­லியன் டொலர் ஊதியம் வழங்­கப்­பட்­டது.

இதன் மூலம் சினிமா வர­லாற்றில் மிக அதிக ஊதியம் பெற்ற நடி­கை­யாக அப்­போது அவர் விளங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

நடிகை டெமி 3 தட­வைகள் திரு­மணம் செய்­தவர். தனது 17 ஆவது வயதில் அமெ­ரிக்கப் பாட­க­ரான ஃப்ரெட்டி மோரை மணந்தார். இவர்­க­ளது திரு­மணம் 5 ஆண்­டு­களில் முடி­வுக்கு வந்­தது. 1985 ஆம் ஆண்டில் ஃப்ரெட்டி மூரி­ட­மி­ருந்து விவா­க­ரத்துப் பெற்றார் டெமி.

எனினும் தனது பெயரின் பின் பகு­தியில் இணைத்துக் கொண்ட கண­வரின் பெயரை மட்டும் இன்னும் அவர் மாற்­ற­வில்லை. 1987 ஆம் ஆண்டு மீண்டும் சக நடி­க­ரான புரூஸ் வில்­லீஸை டெமி இரண்­டா­வ­தாகத் திரு­மணம் செய்து கொண்டார்.

இன்று இவர்கள் விவா­க­ரத்­தான தம்­ப­தி­க­ளாக இருந்த போதும் இன்னும் நட்­பு­டனே நீடிப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

புரூஸ் வில்­லீ­ஸுடன் டெமிக்கு நடந்த திரு­ம­ணத்தில் இத்­தம்­ப­தி­யி­ன­ருக்கு மூன்று மகள்கள் இருக்­கி­றார்கள்.

புரூஸ் வில்ஸும் டெமி மூரும் 11 ஆண்­டு­களின் பின் 1998 ஆம் ஆண்டு விவா­க­ரத்து செய்­தனர்.

2003 ஆம் ஆண்டில் தன்னை விட 15 வயது இளை­ய­வ­ரான நடிகர் அஷ்டன் புட்­சரைத் திரு­மணம் செய்து கொண்டார்.

இந்த திரு­மண உறவும் 2013 ஆம் ஆண்டில் முறிந்­தது.  இப்­போது தன் மூன்று மகள்­க­ளுடன் டெமி மூர் வசித்து வரு­கிறார்.

இந்­நி­லையில், ‘இன்சைட் அவுட் (Inside Out) எனும் பெயரில் சுய­ச­ரிதை புத்­த­கத்தை டெமி மூர் வெளி­யிட்­டுள்ளார்.

இப்­புத்­த­கத்தில் பல பர­ப­ரப்­பான தக­வல்­களை அவர் வெளி­யிட்­டுள்ளார்.

மூன்­றா­வது கண­வரும் டெமியை விட 15 வயது இளை­ய­வ­ரு­மான அஷ்டன் குட்சர் மீது டெமி மிக அதிர்ச்­சி­க­ர­மான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்ளார்.

அஷ்டன் குட்­சரை, தான்­ தி­ரு­மணம் செய்து கொண்­ட­தற்­கான முக்­கிய காரணம், தன்னை தனது 20 களில் வாழ வைக்க அஷ்டன் போன்ற வயதில் இளை­ய­வரால் மட்­டுமே முடியும் என்று நம்பி தான் அஷ்டன் மீது காதல் வயப்­பட்­ட­தா­கவும் அதன் கார­ண­மா­கவே அவரை மணந்து கொண்­ட­தா­கவும் டெமி மூர் தெரி­வித்­துள்ளார்.

தங்­க­ளி­டை­யே­யான விவா­க­ரத்­துக்கு முக்­கிய கார­ண­மாக முன் வைப்­பது, அஷ்டன் குட்சர், வேறு பெண்­ணையும் இணைத்­துக்­கொண்டு பாலியல் உறவில் ஈடு­பட வற்­புத்­தி­ய­மையே எனத் தெரி­வித்­துள்ளார்.

இது தன்னை மிகுந்த மன உளைச்­ச­லுக்கு ஆளாக்­கி­ய­தாகக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார் டெமி மூர்.

அது­மட்­டு­மல்ல, அஷ்டன் தந்த மன உளைச்­சலின் கார­ண­மா­கவே தனக்கு கருக்­க­லைப்பு நேர்ந்­த­தா­கவும் அது மேலும் தன்னை மன அழுத்­தத்­துக்கு ஆளா­கி­யதாகவும் டெமி மூர் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, இந்நூல் தொடர்­பாக அவர் அளித்த செவ்வியொன்றில், 15 வயதில் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். 

மது போதைக்கு ஆளான தனது தாய்க்கு நபர் ஒருவர் பணத்தை வழங்கிவிட்டு, 15 வயதான தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக டெமி மூர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!