போரிஸ் ஜோன்சன் தனது தொடையை கசக்கியதாக பெண் ஊடகவியலாளர் குற்றச்சாட்டு; பிரதமர் போரிஸ் ஜோன்சன் மறுப்பு

Boris Johnson accused of 'squeezing woman journalist's thigh

0 1,749

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பல வருடங்களுக்கு முன்னர் பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொடையை கசகிக்கினார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சார்லட் எட்வட்ஸ் எனும் ஊடகவியலாளர் பிரிட்டனின் சண்டை டைம்ஸ் பத்திரிகையில் இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

சார்லட் எட்வட்ஸ்


1999 ஆம் ஆண்டு ஸ்பெக்டேட்டர் சஞ்சிகையின் அலுவலகத்தில் வைத்து தனத தொடையை போரிஸ் ஜோன்சன் கசக்கினார் என சார்லட் எட்வட்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரத்தியேகமாக மதிய உணவு உட்கொண்டபோது, மேசைக்குள் கீழ் தனது தொடையை போரிஸ் ஜோன்சன் தொடையைக் கச்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளையில் போரிஸ் ஜோன்சன் ஸ்பெக்டேட்டர் பத்திரிகையின் ஆசிரியராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமரின் உத்தியோபூர்வ வாசஸ்தலம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இக்குற்றச்சாட்டில் உண்மையில்லை என பிரதமரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ;, இதற்கு பதிலளித்த சார்லட் எட்வட்ஸ்  ‘பிரதமருக்கு (ஜோன்சன்) இச்சம்பவவம் தெளிவாக நினைவில் இல்லாவிட்டால் அவரை விட எனக்கு சிறந்த நினைவாற்றல் உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

அந்த மதியபோசன நிகழ்வில் கலந்துகொண்ட மற்றொரு பெண், தனக்கும் போரிஸ் ஜோன்சன் இப்படிச் செய்தார் எனத் தெரிவித்துள்ளார் எனவும் சார்லட் எட்வட்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!