நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன் -தர்ஷன்

0 333

இவ்வாரம் ‘பிக்பொஸ் 3 நிகழ்ச்சி­யில் இருந்து வெளியான தர்ஷன் தனக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் மற்றும் ‘பிக்பொஸ் 3’ க்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பொஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன் 98 ஆவது நாளில் வெளியேறியுள்ளார்.

நிச்சயம் இந்த முறை டைட்டில் வின்னர் அவர் தான்என தான் தர்ஷனை பற்றி பிக்ெபாஸ் ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஆனால் அவர்களின் நம்பிக்கை எல்லாம் நேற்று முன்தினம் தவிடுபொடியாகிவிட்டது.

டைட்டில் வின்னர் என சொல்லப்பட்ட தர்ஷன் 98வது நாளில் வெளியே அனுப்பப்பட்டு விட்டார்.தர்ஷன் வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

எவிக் ஷனுக்கு பிறகு ‘பிக் ெபாஸ்’ தர்ஷன் வெளியிட்ட முதல் பதிவு இணை­யத்தில் வைரலாகி வருகிறது.டைட்டில் ஜெயிக்க முடிய­லையே என உள்ளுக்குள் சின்னதாக ஒரு வருத்தம் இருந்தாலும், அதை எல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் திடமாக இருக்கிறார் தர்ஷன்.

இந்த நிலையில், தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். “தெரிந்தவர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது நல்ல விஷயம் தான்.

ஆனால் தெரியாதவர்களிடம் இருந்து, ஒருமுறைகூட பார்க்காத­வர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உணர்வை தருகிறது.

என் வாழ்வின் மிகச் சிறந்த நாள் இன்று. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரிடம் இருந்தும் வாழ்த்து­களும், அன்பும், ஆதரவும் கொட்டுகிறது.

இப்படி ஒரு சிறந்த பரிசை கொடுத்த ‘பிக் ெபாஸ் 3’ க்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

என்னை தங்களின் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக நினைத்து, கடந்த 98 நாட்களாக அன்பும், ஆதரவும் அளித்த அத்தனை பேருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

எனது இதயத்தில் நான் அன்பை உணர்கிறேன்.விரைவில் உங்களை சந்திக்கிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்”, என தர்ஷன் பதிவிட்டுள்ளார்.

தர்ஷனின் இந்த பதிவை ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிக­மான கமெண்டுகள் பதிவு செய்யப்­பட்டுள்ளன. தர்ஷனின் வெளியேற்றத்­துக்காக கண்ணீர் சிந்தியதாக பலரும் அதில் குறிப்பிட்டுள்ளனர். பிக்ெபாஸ் டைட்டிலை விட பெரிய டைட்டிலான மக்களின் இதயங்களை வென்றிருக்கிறார் தர்ஷன்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!