ஜப்பானில் பேஜர்கள் இன்று இறுதியாக ஒலித்தன

Japan's last pagers beep for the final time

0 269

ஜப்பானில் செயற்பட்ட கடைசி பேஜர் தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்று கடைசியாக ஒலித்தன.

செல்லிடத் தொலைபேசிகள் பரவலாகுவதற்கு முன்னர் பேஜர் எனும் தொலைத்தொடர்பு சாதனம் பிரச்சித்தடைந்திருந்தது.

1950 மற்றும் 1960களில் உருவாக்கப்பட்ட பேஜர்கள் 1980களில் உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டன.

இலங்கையிலும் 1990களில் பேஜர் சாதனங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

பேஜர்கள் பெரும்பாலும் ஒரு வழி தொலைத்தொடர்பு சாதனமாகவே இருந்தது.

எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வருகை பேஜர் பாவனையை குறையச் செய்தது.

இந்நிலையில், ஜப்பானில் இறுதியாக இயங்கிய பேஜர் நிறுவனமான ‘டோக்யோ டெலிமெசேஜ்’ இன்று செவ்வாய்க்கிழமையுடன் தனது சேவையை நிறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!