தொலைபேசியை unlock செய்வதற்காக பூங்காவில் காதலனுடன் மோதிய பெண் (வீடியோ)

0 2,470

ஆண் ஒரு­வரின் முக அடை­யா­ளத்தைப் பயன்­ப­டுத்தி செல்­லிடத் தொலை­பே­சி­யொன்றை ‘அன்லொக்’ செய்­வ­தற்கு முயற்­சித்த பெண்­ணொ­ருவர் மேற்­படி ஆணுடன் கட்டிப் புரண்டு சண்­டையிட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி ஆண், குறித்த பெண்ணின் காதலர் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. இம்­மோ­த­லின்­போது பதிவு செய்­யப்­பட்ட வீடி­யோ­வொன்று சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளது.

பூங்­கா­வொன்றில் இந்த ஜோடி­யினர் அமர்ந்­தி­ருந்­தனர். அப்­போது செல்­லிடத் தொலை­பே­சி­யொன்றை மேற்­படி ஆணின் முகத்­துக்கு நேராக அப்பெண் பிடித்தார்.

அந்த ஆணின் முக அடை­யா­ளத்தின் மூலம் தொலை­பே­சியை அன்லொக் செய்­வ­தற்கு அப்பெண் முயன்றார்.
ஆனால், குறித்த ஆண் இதற்கு இட­ம­ளிக்­க­வில்லை. இதனால், குறித்த ஆணுடன் மேற்­படி பெண் கட்டிப் புரண்டு மோதலில் ஈடு­பட்டார்.

இறு­தியில் தனது முயற்­சியில் வெற்றி பெற்ற பெண் சந்­தோஷ கூச்­ச­லிட்­ட­வாறு தொலைபேசியுடன் அப்பால் ஓடியமை வீடியோவில் பதிவாகியுள்ளது.

வீடியோ:

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!