அறுகம்பை அலைச் சறுக்­கலில் ஆஸி. வீரர் பார்க்­கின்சன் வெற்றி; இந்­தோனேஷியாவின் ஒனி அன்வர் இரண்டாம் இடம்

0 331

அறுகம்பை குடாவில் கடந்த வாரம் நடை­பெற்ற 2019 சோ ஸ்ரீலங்கா ப்ரோ வேர்ல்ட் சேர்வ் லீக் குவ­லி­பையிங் சீரிஸ் 3000 (2019 So Sri Lanka Pro World Surf League (WSL) Qualifying Series (QS) 3000) கடல் அலைச்­ச­றுக்கல் போட்­டியில் அற்­பு­த­மான ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய அவுஸ்­தி­ரே­லி­யாவின் மிச் பார்க்­கின்சன் வெற்­றி­பெற்றார்.

 

அரு­கம்பை குடா கடற்­க­ரையில் குழு­மி­யி­ருந்த பார்­வை­யா­ளர்­களைப் பிர­மிக்கச் செய்யும் வகையில் கடும் கடல் அலை­க­ளுக்கு மத்­தியில் இறுதிப் போட்­டியில் துணிச்­ச­லுடன் பங்­கு­பற்­றிய பார்க்­கின்சன் பல தட­வைகள் மூன்று முதல் நான்கு அடி வரை சுழன்­ற­வாறு உயரே சென்­றதன் மூலம் வெற்­றி­யீட்­டினார்.

 

தகு­திகாண் சுற்­று­களில் மிக நேர்த்­தி­யா­கவும் அற்­பு­த­மா­கவும் ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்தி இறுதிச் சுற்­றக்கு தெரி­வா­கி­யி­ருந்தார்.அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட்டை சொந்த நக­ராகக் கொண்ட பார்க்­கின்சன், பங்­கு­பற்­றிய சகல நிகழ்ச்­சி­க­ளிலும் கால்­களில் பொருத்­தப்­பட்ட சேர்பைக் கொண்டு மேலெழும் கடல் அலை­க­ளை­விட உயரே சென்று வெற்­றிக்­கான புள்­ளி­களைப் பெற்ற வண்ணம் இருந்தார்.

Callum Rovson

 

கடல் அலைச் சறுக்கல் போட்டி வர­லாற்றில் பார்க்­கின்சன் ஈட்­டிய மிகப்­பெ­ரிய வெற்றி இது­வாகும்.கடல் அலைச் சறுக்­க­லுக்கு இறுதிப் போட்­டியில் பார்க்­கின்­ச­னுக்கு பெரும் சவால் விடுத்­த­வாறு இந்­தோ­னே­சி­யாவின் அன்வர் ஒனீ போட்­டி­யிட்டார். எனினும் கடைசி நிகழ்ச்­சியில் பார்­க்கின்சன் வெளிப்­ப­டுத்­திய ஆற்றல் அன்­வரை இரண்டாம் இடத்­துக்கு தள்­ளி­யது.

Parkinson

 

முத­லி­டத்தைப் பெற்ற பார்க்­கின்­ச­னுக்கு 15,000 அமெ­ரிக்க டொலர்­களும்  இரண்டாம் இடத்தைப் பெற்ற அன்வர் ஒனீக்கு 7,000 அமெ­ரிக்க டொலர்கள் பணப்­ப­ரிசும் வழங்­கப்­பட்­ட­துடன் இரு­வறும் யானை வடிவில் விரு­து­களும் வழங்­கப்­பட்­டன.

Kehu Butler

 

இப் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து, இந்­தோனேஷியா, ஜப்பான், இந்­தியா, மலே­சியா, ஐக்­கிய அமெ­ரிக்கா, பிரேஸில், ஆர்­ஜன்­டீனா, சிலி,  பெரு, பிரான்ஸ், ஸம்­பியா, பெரிய பிரித்­தா­னியா, ஸ்பெய்ன், பெல்ஜியம், போர்த்துகல், இஸ்ரேல், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட அலைச்சறுக்கல் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். (என்.வீ.ஏ.)

Mitch Parkinson

 

 

Oney Anwar

 

Mitch Parkinson

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!