முல்லை. நாயாற்றில் எந்த ஓர் இந்து ஆலயமும் இருக்கவில்லை!- எஸ்.பி.திஸாநாயக்க

'பிரபாகரனின் பெரியப்பா போன்று முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் இனவாதம் பேசுகிறார்'

0 221

                                   (நா.தனுஜா)
முல்லைத்தீவு நாயாறு குருகஹந்த விகாரை தொடர்பில் ஆராய்ந்து அதன் வரலாறு மற்றும் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட பின்னரே இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் கருத்து வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

முல்லைத்தீவு நாயாறு குருகஹந்த விஹாரை தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். இனங்களுக்கு இடையிலான தேசிய நல்லிணக்கம் குறித்தும் இவர்களே கருத்துக்களை முன்வைக்கின்றனர். முதலில் அவர்கள் இருவரும் நாயாறு குருகஹந்த விகாரை பற்றி நன்கு ஆராய்ந்த பின்னர் கருத்துக்களைக் கூறவேண்டும்.

அங்கு எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவேயில்லை. இவ்விடயம் குறித்து கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அவர் எப்போதும் பிரபாகரனின் பெரியப்பா போன்று இனவாதமாகவே பேசுகின்ற காரணத்தினால் அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!