பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து கவின்

0 390

‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கவின் ‘பிக்ெபாஸ்’ வீட்டில் சர்ச்சைகளில் சிக்கினாலும், சமூகவலைதளத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டிருந்தவர். அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட போதும் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தார்.

எனவே எப்படியும் பைனலுக்கு வருவார், டைட்டிலை வெல்வார் என கவின் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால், அதிரடியாக கடந்த வாரம் பிக் ெபாஸ் கொடுத்த ரூ. 5 இலட்சத்தை பெற்றுக் கொண்டு பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் கவின்.

 

அவர் தனது குடும்ப பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு தான் இந்தப் பணம் போதும் எனக் கிளம்பிச் சென்றார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்து கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்­ளார்.

அதில், “எனக்கு இதை எப்படி ஆரம்பிக்கிறது என்றே தெரிய­வில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு அல்லது தற்போது எனக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்த பிறகு சொல்லலாம் என்று இருந்தேன்.

முதலில் நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்­பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் முயற்சி செய்த அனைத்திலும் தோல்வி அடைந்­தேன் என்று நினைத்தேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தொலைத்தவற்றை இந்த வாய்ப்பு மூலம் மீண்டும் பெற்றுவிடலாம் என்று நினைத்தேன்.

நான் பாசிட்டிவ் ஆட்டிடியூடுடன் உள்ளே சென்றேன்.அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த விரும்பினேன்.

இதை தவிர நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்ச்சி மூலம் கொஞ்சம் பணம் மற்றும் புகழை மட்டுமே எதிர்பார்த்தேன்.

ஆனால் தற்போது புகழை என்னால் புரிந்து கொள்ளவோ, முழுமனதுடன் ஏற்கவோ முடியவில்லை.

இந்த புகழை நான் ரசிக்க நினைத்தாலும் எதிர்பார்க்காமல் ஏற்பட்ட பிரச்சினைகளால் அது முடியவில்லை.

அதனால் நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு என்னால்சரியாகநன்றிசொல்லமுடியவில்லை. தற்போது நீங்கள் காட்டிய அன்புக்கு பதில் அன்பு காட்டுவதை விட என் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது தான் முக்கியம்” என அப்பதிவில் கவின் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!