இணையத் தொடரில் நடிக்கும் “பிக் பொஸ் “ அபிராமி

0 77

நடிகையும், ெமாடலுமான அபிராமி ’இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ெமாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், குணச்சித்திர நடிகை என பன்முக கலைஞராக வலம் வந்துகொண்டிருப்பவர்,

அபிராமி. இவர் சமீபத்தில் வெளியான `நேர்கொண்ட பார்வை’ படத்தில் பமீதா என்கிற கெரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பிக்பொஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

போட்டியிலிருந்து வெளியேறிய அபிராமி, இயக்குநர் கௌதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் கமிட்­டாகி இருப்பதாக தகவல் வந்தது.

இந்நிலையில் சோனி லிவ் செயலியில் வெளியாகியுள்ள ‘இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிரைம் திரில்லராக இந்த தொடர் உருவாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!