யாரை காப்­பாற்ற தர்ஷன் வெளியேற்­றப்­பட்டார்? காலம் பதில் சொல்­லுமா பிக்பொஸ்?

0 1,163

-ஏ.எம். சாஜித் அஹமட்- 

(அநே­க­மான எல்லா பார்­வை­யா­ளர்­களும் தர்­ஷனின் வெளியேற்­றத்­தினைப் பற்றி விமர்­சிக்கும் நிலை­யினை அவ­தா­னிக்­கையில், கமல் கூறும் மக்கள் எங்கே வசிக்­கி­றார்கள் எனும் சந்­தேகம் மேலோங்­கு­கி­றது).

எதிர்­பா­ராத பல திருப்­பங்கள் பிக்பொஸ் வீட்டின் உள்ளே நடந்­தே­றி­விட்­டன. அதுதான் கமலின் தாரக மந்­தி­ரமும் கூட.

எதிர்­பா­ரா­ததை எதிர்­பா­ருங்கள் என கமல் சொல்லும் போது, பிக்பொஸ் வீட்டில் புகுந்­தி­ருக்கும் அர­சி­யலின் அதி­ரடி முகத்­தினை எம்மால் புரிந்து கொள்ள முடி­கி­றது.

சில தரு­ணங்­களில் இவை புரி­யாத புதி­ரா­க­வே­யி­ருக்­கின்­றன.சென்ற வாரம் விசித்­தி­ர­மான இரண்டு சம்­ப­வங்கள் பிக்பொஸ் வீட்டில் அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.

எப்­பொ­ழுதும் போல பிக்பொஸ் ஐந்து இலட்சம் பணத்­தினை முன்னே வைத்து, பிக்பொஸ் வெற்­றி­யா­ள­ருக்கு ஐம்­பது இலட்சம் பண­மாக வழங்­கப்­படும் ஆயினும் இந்த ஐந்து இலட்சம் ரூபா­வை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு யாரா­வது வெளியேற விரும்­பினால், தாரா­ள­மாக வெளியே­றலாம் என அறி­விக்­கப்­பட்­டது.

உடனே கவின் தயா­ரா­கி­விட்டார். சாண்டி, லொஸ்­லியா போன்­ற­வர்கள் கெஞ்சிக் கேட்டும் கவின் தனது முடிவில் எவ்­வித மாற்­றங்­க­ளி­னையும் ஏற்­ப­டுத்­த­வில்லை.

அழு­கையும், ஆர்ப்­பாட்­ட­மு­மாக கவின் வெளியே­றி­விட்டார். எஞ்­சி­யி­ருந்­த­வர்கள் முகின், தர்ஷன், லொஸ்­லியா, ஷெரின். இதில் முகின் கோல்டன் டிக்கட் பெற்று நேர­டி­யாக பிகபொஸ் இறுதிச் சுற்­றுக்குள் நுழைந்­தவர்.

கவின் வெளியே சென்­றதால் இவ்­வாரம் எவிக்ஷன் இல்­லை­யென்று நீங்கள் நினைக்க வேண்டாம், நிச்­சயம் எவிக்ஷன் உண்டு என்றார் கமல். சாண்டி, லொஸ்­லியா, தர்ஷன், ஷெரின் என அனை­வரும் பதற்றத்தின் உச்­சியில் வரி­சை­யாக அமர்ந்­தி­ருந்­தனர். காப்­பாற்­றப்­ப­டு­ப­வரின் பெய­ரினை கச்­சி­த­மாகச் சொன்னார் கமல். சாண்டி காப்­பாற்­றப்­பட்டு விட்டார்.

மிகு­தி­யி­ருந்த லொஸ்­லியா, ஷெரின், தர்ஷன் மூன்று பேரில் லொஸ்­லியா அல்­லது ஷெரின் வெளியே போய்­வி­டுவார் என அனை­வரும் நினைக்க, நடந்­தது வேறொன்று. யாரும் எதிர்­பார்க்­காத நொடியில் வெளியேற்­றப்­பட்டார் தர்ஷன்.

கம­லுக்கு கூட இந்த வெளியேற்றம் ஆச்­ச­ரி­ய­ம­ளிப்­ப­தாக சொல்லிக் கொண்டார். இதனை சற்றும் எதிர்­பார்க்­காத தர்ஷன் புன்­ன­கை­யுடன் வெளியே வந்தார்.

தர்­ஷனின் வெளியேற்­றத்­தினை பார்­வை­யா­ளர்கள் அழுது தீர்த்­தனர். தர்ஷன் வெளியே­று­வ­தற்­கான எவ்­வித வாய்ப்­பு­களும் இல்­லாத சூழலில் இது எப்­படி நடந்­தது எனும் கேள்வி அனைவர் மன­தி­னையும் குத்திக் குடைந்­தது.

பிக்பொஸ் என்­பது பார்­வை­யா­ளர்­களின் உச்­ச­கட்ட அனு­பவப் பகிர்வின் மீது பெருத்த சவா­லினை ஏற்­ப­டுத்தக் கூடி­யது. தர்­ஷனின் விட­யத்தில் பெரும் குழப்­படி நிகழ்ந்­தி­ருக்­கி­றது.

யாரை காப்­பாற்­று­வ­தற்­காக தர்ஷன் பலி­யாக்­கப்­பட்­டி­ருக்­கிறார் என்­ப­தனை புரிந்து கொள்­வதில் எவ்­வித சிக்­கலும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

பிக்பொஸ் வீட்டை விட்டு ஏலவே வெளியே­றிய அனை­வரும் இருவர், மூவ­ராக வீட்டில் இருப்­ப­வர்­களை சந்­திக்க வந்­தார்கள். ஆடலும், பாட­லு­மாக கடந்து சென்ற அவர்­க­ளது பொழு­து­களில், புய­லாக நுழைந்தார் வனிதா.

தர்­ஷனின் வெளியேற்­றத்­திற்கு ஷெரீன்தான் காரணம் என சொன்­னதும், திடுக்­கிட்டுப் போய்­விட்டார் ஷெரீன். வனி­தா­விற்கும், ஷெரீ­னுக்கும் இடையே பலத்த வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

அப்­ப­டி­யான காட்­சிகள் ஏதும் காட்­டப்­ப­ட­வில்லை என சாக்ஷி கூறி­னாலும், வனி­தாவின் பல­மான வாதம் ஷெரீன் கண்­களில் கண்­ணீரை வர­வ­ழைத்து விட்­டது. ரொம்­பவும் நொந்து போனார் ஷெரீன்.  மக்­களால் தர்ஷன் வெளியேற்­றப்­பட்டார் என சொல்லும் கமல், அதற்கு காரணம் ஷெரீன்தான் என வனி­தா­வினை சொல்ல வைப்­பதில் பல இர­க­சி­யங்கள் இருக்­கின்­றன.

தர்­ஷனின் வெளியேற்­றத்­திற்­கான கார­ணத்­தினை மூடி­ம­றைக்­கின்ற அல்­லது வேறு பிரச்­சி­னையின் பக்கம் திசை திருப்பி விடு­கின்ற ராஜ­தந்­திர விளை­யாட்டு பிக்பொஸ் வீட்டின் உள்ளே அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.  கவின் விட­யத்தில் அதி­க­மாக விமர்­சிக்­கப்­பட்­டவர் லொஸ்­லியா. கவினின் வெளியேற்­றத்­திற்கு பல கார­ணங்கள் இருந்­தாலும், லொஸ்­லி­யாதான் பிர­தா­ன­மான காரணம்.

கவின் வெளியேறிச் சென்­றதன் பிறகு லொஸ்­லி­யாதான் வெளியேற்­றப்­ப­டுவார் என அனை­வரும் நம்­பி­யி­ருந்­தனர். அதற்கு நியா­ய­மான பல கார­ணங்கள் இருந்­தன.

  ஆனால் மிகச்­சி­றப்­பாக விளை­யா­டிய தர்ஷன் வெளியேற்­றப்­பட்டார். தர்­ஷனின் வெளியேற்­றத்­தினை மக்கள் தீர்ப்பு என்­கிறார் கமல். அநே­க­மான எல்லா பார்­வை­யா­ளர்­களும் தர்­ஷனின் வெளியேற்­றத்­தினைப் பற்றி விமர்­சிக்கும் நிலை­யினை அவ­தா­னிக்­கையில், கமல் கூறும் மக்கள் எங்கே வசிக்­கி­றார்கள் எனும் சந்­தேகம் மேலோங்­கு­கி­றது.

இதற்கு பல நியா­யங்­களை கமல் கூறி­னாலும், வெளிப்­படை யுகத்­தி­லி­ருந்து அவரால் தப்­பிக்க முடி­யாது. காலம் அறுத்துக் கொல்லும்.

பிக்பொஸ் வீட்டின் சங்­க­திகள் இன்னும் சில தினங்­களில் முடி­வ­டையப் போகி­றது.

அழ­கிய இசைக் கச்­சே­ரி­யுடன் சென்ற வாரம் கடந்து விட்­டது. முகின் மிகச் சிறப்­பாக தன்­னு­டைய திற­மை­களை வெளிக்­காட்­டு­கிறார்.

பிக்பொஸ் வீட்டில் அவ­ரது பாடல் அனை­வ­ரையும் கவர்ந்­தி­ருக்­கி­றது. துடிப்­பான இளை­ஞ­னாக பிக்பொஸ் வீட்­டினை பயன்­ப­டுத்திக் கொண்­ட­வர்­களில் தர்­ஷனும், முகினும் பிர­தா­ன­மா­ன­வர்கள்.

சாண்டி நகைச்­சு­வை­யாக காலத்­தினை கடத்­து­பவர். அவ­ரது வெற்­றிக்­கா­கவா தர்ஷன் வெளியேற்­றப்­பட்­டி­ருக்­கிறார் எனும் சந்­தேகம் அனை­வ­ரி­டத்­திலும் தொற்றிக் கொண்­டி­ருக்­கி­றது.

தர்ஷன் இறுதிச் சுற்­று­வரை சென்­றி­ருக்க வேண்­டிய போட்­டி­யாளர். ஆனாலும் விதியின் விளை­யாட்டா? கமலின் சதி­ராட்­டமா? எனப் புரிந்து கொள்ள முடி­யா­த­படி திட்­டத்­தினை வகுத்­தி­ருக்­கி­றார்கள். தர்ஷன் எவ்­வித நியா­யங்­க­ளு­மின்றி வெளியேற்­றப்­பட்­டி­ருக்­கிறார்.

நிச்­ச­ய­மாக இவவெளி­யேற்றம் யாரோ ஒரு­வரை மிகக் கவ­ன­மாக காப்­பாற்­று­வ­தற்­கான பாரிய முயற்­சிதான். அவர் யார் என்­ப­தனை இன்னும் சில தினங்கள் வெளிக்­காட்டும். அனைத்­திற்கும் காலம் பதில் சொல்லும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!