என் மனக் காயம் ஆறியது! தந்தை குறித்து ப்ரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி

0 151

‘தி ஸ்கை இஸ் பின்க்’ படத்தில் நடித்­தமை தன் தந்­தையைப் பற்­றிய நினை­வு­க­ளுக்கும், தனக்குள் இருந்த எதிர்­மறை உணர்ச்­சி­க­ளுக்கும் ஒரு தீர்­வாக இருந்­தது என நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரி­வித்­துள்ளார்.

ஷோனாலி போஸ் இயக்­கத்தில் ஃபர்ஹான் அக்தர், ப்ரியங்கா சோப்ரா நடித்­துள்ள படம் ‘தி ஸ்கை இஸ் பிங்’.

நுரை­யீரல் பிரச்­சி­னையால் பாதிக்­கப்­பட்ட ஒரு பெண்ணின் பெற்­றோரைப் பற்­றிய கதை இது.

தன்­னம்­பிக்கை பேச்­சாளர் ஆயிஷா சௌத்­ரியின் உண்மைக் கதை இது.

ஆயிஷா சௌத்­தி­ரியின் தாய் கதா­பாத்­தி­ரத்தில் ப்ரியங்கா நடிக்­கிறார். இந்தப் படத்தின் இணை தயா­ரிப்­பா­ள­ரா­கவும் ப்ரியங்கா செயல்­பட்­டுள்ளார்.

இதில் நடித்த அனு­பவம் குறித்து பேசி­யுள்ள ப்ரியங்கா, ‘இந்தப் படம் நடித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது உள­வியல் ரீதி­யாக எனக்கு வித்­தி­யா­ச­மான அனு­ப­வ­மாக இருந்­தது.

எனது தந்­தையின் இழப்­புக்குப் பின் காய­ம­டைந்த என் மனதின் ஒரு பகுதி (இதில் நடித்­ததன் மூலம்) ஆற்­றப்­பட்­டு­விட்­ட­தாக உணர்­கிறேன்.

நான் உணர்ந்த அந்த உணர்ச்­சி­களை எப்­படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை. இயக்­குநர் ஷோனா­லியின் வழி­காட்­டுதல் படி அதிதி கதா­பாத்­தி­ரத்தில் நடித்தேன்.

நம் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இழப்பு மரணம் என்­பது இயல்­பாக நடக்­கக்­கூ­டிய விஷயம் என்­பதை புரிந்­து­கொண்டேன்.

நாம் விரும்பும் ஒரு­வரின் இழப்பை நினைத்து வருந்­து­வதை விட, அவர் வாழ்ந்த வாழ்க்­கையைக் கொண்­டா­ட­வேண்டும் என்­பது புரிந்­தது. இதுதான் என்னை மாற்­றி­யது.

என்னுள் இன்னும் எதிர்­ம­றை­யான உணர்ச்­சிகள் உள்­ளன. நான் கோபத்தில் இருந்தேன், காயப்­பட்­டி­ருந்தேன்.

தனித்து விடப்­பட்­ட­தாக உணர்ந்தேன். படத்தின் படப்­பி­டிப்பின் போதுதான் என் திரு­மணம் நடந்­தது.

அப்­போது என் அம்மா இந்தச் சந்­தர்ப்­பத்தில் தனி­யாக நிற்க வேண்டும், எனது தந்தை என்னுடன் இல்லை என்பதையெல்லாம் நினைத்து வருந்தினேன். இந்தப் படம் எனக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது’ என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!