மார்வெல் படங்களில் மீண்டும் ‘ஸ்பைடர்மேன்’ பாத்திரம்!

0 50

மார்வெல் படங்­களில் மீண்டும் ‘ஸ்பைடர்மேன்’ கதா­பாத்­திரம் இடம்­பெறும் என அதி­கா­ரபூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
2002ஆம் ஆண்டு சாம் ரெய்மி இயக்­கத்தில் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்­படம் வெளி­யா­னது.

அப்­போது முதல் ‘ஸ்பைடர்மேன்’ கதா­பாத்­தி­ரத்தின் உரிமை அப்­ப­டத்தை தயா­ரித்த சோனி நிறு­வ­னத்­திடம் இருந்து வரு­கி­றது.

2015ஆம் ஆண்டு சோனி நிறு­வ­னத்­துக்கும் ஸ்பைடர்மேன் கதா­பாத்­தி­ரத்தை உரு­வாக்­கிய மார்வல் நிறு­வனம் இடையே ஒரு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­னது.

அதில் அவெஞ்சர்ஸ் உள்­ளிட்ட மார்வெல் சினி­மாட்டிக் யுனிவர்ஸ் படங்­களில் ஸ்பைடர்மேன் கதா­பாத்­தி­ரத்தை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்று முடிவு செய்­யப்­பட்­டது.

அதன்­படி ‘கெப்டன் அமெ­ரிக்கா சிவில் வோர்’, ‘ஸ்பைடர்மேன் ஹோம்­கமிங்’, ‘அவெஞ்சர்ஸ் இன்ஃ­பி­னிட்டி வோர்’, ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’, ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகிய படங்­களில் ஸ்பைடர்மேன் கதா­பாத்­திரம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இவற்றில் ‘ஸ்பைடர்மேன் ஹோம்­கமிங்’, ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகிய இரு படங்­களும் சோனி தயா­ரிப்பில் வெளி­யான படங்­க­ளி­லேயே அதிக வசூலை வாரிக் குவித்த படங்­க­ளாகும்.

இந்­நி­லையில் ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50 சத­வீதம் கேட்கும் மார்வெல் நிறு­வ­னத்தின் கோரிக்­கையை சோனி நிறு­வனம் ஏற்­க­வில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பேச்­சு­வார்த்தை தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து மார்வெல் நிறு­வ­னத்தின் தலைவர் கெவின் ஃபீஜ், சோனி – மார்வெல் கூட்டு தயா­ரிப்பு உரு­வாகும் ஸ்பைடர்மேன் படங்­களில் இனி தலை­யி­டு­வ­தில்லை என்று வில­கினார்.

சமூக வலை­த­ளங்­களில் #SaveSpiderMan, என்ற ஹாஷ்­டேக்­குகள் மூலம் உலக அளவில் இந்த பிரச்­சி­னையை டிரென்ட் செய்­தனர் ஸ்பைடர்மேன் ரசி­கர்கள். இனி மார்வெல் படங்­களில் ஸ்பைடர்­மேனை பார்க்க முடி­யாது என்ற கவ­லையில் இருந்த ரசி­கர்­க­ளுக்கு இனிப்­பான செய்தி ஒன்று வெளி­யா­கி­யுள்­ளது.

சோனி – மார்வெல் இடையே நடந்த இறு­திக்­கட்ட பேச்­சு­வார்த்­தையில் உடன்­பாடு ஏற்­பட்­டது. மார்வெல் சினி­மாட்டிக் யுனி­வர்ஸில் இன்­னொரு ஸ்பைடர்மேன் படம் வெளி­யா­க­வுள்­ள­தா­கவும், அது­வரை மற்ற மார்வெல் படங்­களில் ஸ்பைடர்­மேனின் கேமியோ இருக்கும் என்றும் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இது குறித்து மார்வெல் நிறு­வ­னத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் கூறி­யி­ருப்­ப­தா­வது;ஸ்பைடர்­மேனின் பயணம் மார்வெல் சினி­மாட்டின் யுனி­வர்ஸில் தொட­ரப்­போ­கி­றது என்­பதை நினைக்­கும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது. மார்வெல் ஸ்டூடி­யோவில் உள்ள அனை­வ­ருக்கும் இதில் மகிழ்ச்­சியே.

ஸ்பைடர்மேன் உலகம் முழு­வதும் உள்ள அனைத்து வய­தி­ன­ருக்கும் பிடித்த ஒரு சக்­தி­வாய்ந்த ஹீரோ.சினி­மாட்டிக் யுனி­வர்ஸ்­களை கடக்கக் கூடிய சக்­தி­களை கொண்ட ஹீரோ­வாக ஸ்பைடர்மேன் இருக்­கிறார்.

எனவே, சோனி தொடர்ந்து தங்­க­ளு­டைய சொந்த ஸ்பைடர் யுனி­வெர்ஸை உரு­வாக்­கு­வார்கள், எதிர்­காலம் என்ன மாதி­ரி­யான ஆச்­ச­ரி­யங்­களை கொண்­டுள்­ளது என்­பது யாருக்கும் தெரி­யாது’ எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!