பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் நேபாள முன்னாள் சபாநாயகர் கைது

Nepal's Former speaker arrested over rape allegations

0 732

நேபாளத்தின் சபாநாயகர் கிருஷ்ண பஹதூர் மஹரா, பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

61 வயதான கிருஷ்ண பஹதூர் மஹரா தன்னை பாலியல் வல்லுறவுக்குட்டுபடுத்தினார் என நேபாள நாடாளுமன்றத்தின் உத்தியோகத்தரான பெண் ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

தனது வீட்டுக்கு மதுபோதையுடன் வந்த கிருஷ்ண பஹதூர் மஹரா தன்னை வல்லுறவுக்குட்படுத்தினார் என அப்பெண் செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் மாவோயிஸ்ட் போராளியான கிருஷ்ண பஹதூர் மஹரா இக்குற்றச்சாட்டை நிராகரித்தார்.

எனினும், கடந்த முதலாம் திகதி சபாநாயகர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிருஷ்ண பஹதூர் மஹராவை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு முடிவுற்ற உள்நாட்டு சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக நேபாளத்தின் அப்போதைய அரசுடனான பேச்சுவார்த்தையில் மாவோயிஸ்ட் கெரில்லா அமைப்பின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு கிருஷ்ண பஹதூர் மஹரா தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது,

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!