வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 07 :2001 -ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பு ஆரம்பம்

0 35

1690: பிரித்தானிய படைகள் கனடாவின் கியக்யூபெக் நகரைத் தாக்கின.

1737: இந்தியாவின் வங்காளத்தில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 300,000 பேர் இறந்தனர் என மதிப்பிடப்பட்டது.

1769: பிரித்தானிய நாடுகாண் பயணி கெப்டன் ஜேம்ஸ் குக் நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தார்.

2001: ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பு ஆரம்பம்

1806: பிரிட்டனைச் சேர்ந்த ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது.

1840: இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னராக முடிசூடினார்.

1916: அமெரிக்காவின் கம்பர் பல்லைக்கழகத்துடனான கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஜோர்ஜியா டெக் கல்லூரி 222:0 விகிதத்தில் வென்றது. அமெரிக்க வரலாற்றில் மிக ஒருபக்கச் சார்பாக அமைந்த கூடைப்பந்தாட்டப் போட்டி இது.

1919: நெதர்லாந்தின் கே.எல்.எம். விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.

1940: இரண்டாம் உலகப் போரில் ருமேனியாவை ஜேர்மனி தாக்கியது.

1942: ஐக்கிய நாடுகள் சபையை ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா அறிவித்தன.

1944: இரண்டாம் உலகப் போரில் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் யூதக் கைதிகளின் கிளர்ச்சி இடம்பெற்றது.

1949: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி) உருவாக்கப்பட்டது.

1950: திபெத்து மீதான தாக்குதலை சீனா ஆரம்பித்தது.

1958: பாகிஸ்தான் ஜனாதிபதி இஸ்காண்டர் மிர்ஸா, ஜெனரல் அயூப் கான் ஆதரவுடன் 1956 அரசமைப்பை நிராகரித்து இராணுவ ஆட்சியை ஏற்படுத்தினார்.

1959: சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தொலைவிலுள்ள பகுதிகளின் புகைப்படங்களை முதல் தடவையாக பூமிக்கு அனுப்பியது.

1962: சோவியத் ஒன்றியம் நோவயா சிம்லியா என்ற இடத்தில் அணுக்கரு சோதனையை நிகழ்த்தியது.

1963: ஹெயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றை சூறாவளி தாக்கியதில் 7,190 பேர் கொல்லப்பட்டனர்.

1984: காத்தான்குடியில் பிறந்து, செய்னம்பு நாச்சியார் மான்மியம் உட்பட பல நூல்களை எழுதி புகழ்பெற்ற கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை காலமானார்.

1987: இந்தியாவிலிருந்து ”காலிஸ்தான்” சுதந்திரம் பெறுவதாக பஞ்சாப்பின் சீக்கிய தேசியவாதிகள் பிரகடனம் செய்தனர். அது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

2001: ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு ஆரம்பமாகியது.

2003: ஆஸ்திரியாவில் பிறந்த ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநருக்கான தேர்தலில், வெற்றி பெற்றார்.

2004: கம்போடியாவின் நொரொடொம் சிஹானூக், மன்னர் பதவியில் இருந்து விலகினார்.

2016: மெத்தியூ சூறாவளியினால் ஹெய்ட்டி, அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!