வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 08: 2005 -காஷ்மீர் பூகம்பத்தினால் 87,000 பேர் பலி

0 72

1573 : எண்பதாண்டுகள் போரில் ஸ்பெயினுக்கெதிராக முதலாவது வெற்றியை நெதர்லாந்து பெற்றது.

1582 : கிறகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1860: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்,  சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு இடையில் தந்திச் சேவை ஆரம்பமாகியது.

1967: சே குவேரா கைது செய்யப்பட்டார்

1871 : அமெரிக்காவின் சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1895 : கொரியாவின் கடைசி அரசி ஜோசியனின் மின், ஜப்பானியர்களால் கொல்லப்பட்டார்.

1912 : முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ துருக்கியுடன் போர் தொடுத்தது.

1932 : இந்திய விமானப் படை நிறுவப்பட்டது.

1939 : போலந்தை ஜேர்மனி மேற்கு தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1952 : லண்டனில் ரயில் விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.

1962: ஐ.நாவில் அல்ஜீரியா இணைந்தது.

1967 : கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைதுசெய்யப்பட்டனர்.

2005: காஷ்மீர் பூகம்பத்தினால் 87,000 பேர் பலி

1973 : சுயஸ் கால்வாயின் இஸ்ரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இஸ்ரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டன.

1982 : போலந்தில் தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.

1990 : ஜெருசலேமில் இஸ்ரேலிய படையினர் மசூதி ஒன்றைத் தாக்கியதில் 17 பாலஸ்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

2001 : இத்தாலியின் மிலான் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் கொல்லப்பட்டனர்.

2005 : பாகிஸ்தானின் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரில் ஏற்பட்ட 7.6 ரிச்டர் பூகம்பத்தினால் சுமார் 87,000 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.

2006 : காலி கடற்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.

2018: இராஜங்க அமைச்சராகவிருந்த நிலையில்,  தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஆற்றிய உரை காரணமாக் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!