கொள்கலன் வாகனத்தை பறித்துச்சென்று கார்களின் மீது மோதியவர் கைது : 17 பேர் காயம், 8 கார்கள் சேதம்

Stolen truck slams into cars in Germany, 17 injured: police

0 166

ஜேர்மனியில் பறித்துச் செல்லப்பட்ட கொள்கலன் வாகனமொன்று பல கார்களின் மீது மோதியதால் 17 பேர் காயமடைந்துள்ளனர்.லிம்பர்க் நகரில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் ரயில் நிலையமொன்றில் மேற்படி வாகனத்தை நபர் ஒருவர் பறித்துச் சென்றிருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் வீதியில் பல கார்களின்; மீது அந்நபர் மோதினார். இதனால் 17 பேர் காயமடைந்ததுடன் 8 கார்கள் சேதமடைந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலை நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், இத்தாக்குதலாளியின் நோக்கம் குறித்த ஊகங்களை வெளியிட வேண்டாம் எனக் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!