அஸாருதீனின் மகனுக்கும் சானியா மிர்ஸாவின் தங்கைக்கும் திருமணம்; உறுதிப்படுத்தினார் சானியா மிர்ஸா

Sania Mirza Confirms Sister Anam's Marriage To Mohammad Azharuddin's Son Asad In December

0 1,493

இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்ஸாவின் தங்கை அனம் மிர்ஸா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொஹம்மத் அஸாருதீனின் மகன் அஸாத் அஸாருதீனை திருமணம் செய்யவுள்ளார்.

சானியா மிர்ஸா, அஸாத் அஸாருதீன் , அனம் மிர்ஸா


இத்தகவலை திங்களன்று உறுதிப்படுத்திய சானியா மிர்ஸா, எதிர்வரும் டிசெம்பர் மாதம் இத்திருமணம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்

அனம் மிர்ஸா 2016 ஆம் ஆண்டில் ஹைதராபாத் வர்த்தகரான அக்பர் ரஷீட் என்பவரை திருமணம் செய்திருந்தார். கடந்த வருடம் இவர்கள்கள் விவாகரத்து பெற்றனர்.

சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொய்ப் மாலிக்கை 2010 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அனம் மிர்ஸா, அஸாத் அஸாருதீன்


அனம் மிர்ஸா, சானியா மிர்ஸா


 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!