வரலாற்றில் இன்று: ஒக்டேபார் 09: 1967- சே குவேரா சுட்டுக்கொல்லப்பட்டார்

0 364

1582 : கிறகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து,  போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் அவ்வாண்டின் ஒக்டோபர் 9 ஆம் திகதி இடம்பெறவில்லை.

1799 : லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் பெறுமதியான பொருட்களுடனும் மூழ்கியது.

1967: சே குவேரா சுட்டுக்கொல்லப்பட்டார்

1804 : அவுஸ்திரேலியாவின் தாஸ்மானியா மாநில தலைநகர் ஹோபார்ட் ஸ்தாபிக்கப்பட்டது.

1820 : ஈக்குவடோரின் கயாக்கில் பிராந்தியம் ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக பிரகடனம் செய்தது.

1824: கொஸ்டாரிக்காவில் அடிமை முறைமை ஒழிக்கப்பட்டது.

1835 : கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1854 : ரஷ்யாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் துருக்கியப் படைகாள் ஆரம்பித்தன.

1871 : அமெரிக்காவின் சிக்காகோவில் மூன்று நாட்களாக பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1888 : வோஷிங்டன் நினைவுச் சின்னம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. இது அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடமாக விளங்கியது.

1910 : மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சுப்ரமணிய. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.

1914 : முதலாம் உலகப் போரில் பெல்ஜியத்தின் அண்ட்வேர்ப் நகரம் ஜேர்மனியிடம் வீழ்ந்தது.

1934 : யூகோஸ்லாவியாவின் மன்னன் முதலாம் அலெக்ஸாண்டரும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் லூயிஸ் பார்த்தோவும் பிரான்ஸில் நடைபெற்ற வைபவமொன்றின்போது துப்பாக்கிதாரியொருவனால் கொல்லப்பட்டனர்.

2012: மலாலா யூசுப் ஸாய் சுடப்பட்டார்.

1941 : பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா ஜனாதிபதியானார்.

1962 : பிரித்தானியாவிடம் இருந்து உகாண்டா சுதந்திரம் பெற்றது.

1963 : வடக்கு கிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1967 : ஆர்ஜென்டீனாவில் பிறந்து பிடெல் காஸ்ட்ரோவூடன் கியூப புரட்சியில் பங்குபற்றிய கெரில்லா தலைவர் சே குவெரா,  பொலிவியாவில் ஒக்டோபர் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, அடுத்தநாள் (ஒக்டோபர் 9) புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1970 : கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1981 : பிரான்ஸில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டது.

1983 : பர்மாவின் ரங்கூனில் தென் கொரிய ஜனாதிபதி சுன் டூ-ஹ்வான் மீது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.

2004 : ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றது.

2006 : வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக அறிவிக்கப்பட்டது.

2012: பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசுப்ஸாய்,  தனது பாடசாலையிலிருந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது தலிபான்களால் சுடப்பட்டு படுகாயமடைந்தார். 2014 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் சமாதான பரிசு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!