சனி கிரகத்தில் 82 சந்திரன்கள் கண்டுபிடிப்பு: வியாழனை விஞ்சியது சனி

0 1,246

சனி கிர­கத்தைச் சுற்­றி­வரும் 20 புதிய சந்­தி­ரன்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள என விஞ்­ஞா­னிகள் தெரிவி­த்­துள்­ளனர். இதனால் சனி கிர­கத்தின் சந்­தி­ரன்­களின் எண்­ணிக்கை 82 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதன் மூலம், எமது சூரிய தொகு­தியில் அதிக சந்­தி­ரன்­களைக் கொண்ட கிரகம் என்ற பெயரை வியா­ழ­னி­ட­மி­ருந்து சனி பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இது­வரை அதிக சந்­தி­ரன்­களைக் கொண்ட கிர­க­மாக வியாழன் கரு­தப்­பட்­டது. வியாழன் கிரகம் 79 சந்­தி­ரன்­களைக் கொண்­டுள்­ள­தாக அறி­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்­காவின் கார்­னிகி விஞ்­ஞான நிறு­வகம் எனும் ஆராய்ச்சி நிலை­யத்தின்  விஞ்­ஞா­னிகள், ஹவாய் தீவு­களின் மௌனா­கிய நகரில் பொருத்­தப்­பட்­டுள்ள சுபாரு எனும்  தொலை­நோக்கி மூலம் சனிக்­கி­ர­கத்தில் ஆய்வு நடத்­தினர்.

இந்த ஆய்வின் மூலம் சனி கிர­கத்தை சுற்­றி­வரும் 20 புதிய துணைக் கோள்கள் (சந்­தி­ரன்கள்) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இந்த புதிய துணைக்­கோள்கள் 5 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து சனி கிர­கத்தை சுற்றி வரு­வ­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சந்­தி­ரன்­களில் 17 சந்­தி­ரன்கள், சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதி­ரான திசையில் சனி கிர­கத்தை சுற்றி வரு­கின்­றன. ஏனைய  மூன்று சந்­தி­ரன்கள் சனி கிரகம் சுற்றும் திசையில் சனி கிர­கத்தை சுற்றி வரு­கின்­றன.

சனி கிர­கத்­திற்கு எதி­ரான பாதையில் சுற்றும் சந்­தி­ரன்கள், ஒரு முறை சனி கிர­கத்தை சுற்றி வர 3 வருட காலமும், சனி கிரக பாதையில் சுற்றும் சந்­தி­ரன்கள் இரண்டு வருட காலம் எடுத்து கொள்­வ­தாக விஞ்­ஞா­னிகள்  தெரி­விக்­கின்றனர்.

இந்தப் புதிய துணைக்­கோள்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருப்­பதன் மூலம் அதிக நில­வு­களை கொண்ட கிர­கத்தில் சனி முன்­னிலை பெற்­றுள்­ளது. எனினும், அளவில் மிகப்­பெ­ரிய கிர­க­மான வியா­ழனே இன்னும் மிகப்­பெ­ரிய சந்­தி­ரனை கொண்­டுள்­ளது.

இந்த கண்­டு­பி­டிப்பு தொடர்­பாக கண்­டு­பி­டிப்புக் குழுவை வழி­ந­டத்­திய கார்­னிகி கார்­னிகி விஞ்­ஞான நிறு­வ­கத்தைச் சேர்ந்த கலா­நிதி ஸ்கொட் ஷெப்பர்ட் கூறு­கையில், ‘சனி கிர­கத்தை இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத  மேலும் 100 சிறிய சந்­தி­ரன்கள் சுற்றி வரக்­கூடும், உலகின் மிகப் பெரிய தொலை­நோக்­கிகள் சில­வற்றைப் பயன்­ப­டுத்தி, மாபெரும் கிர­கங்­களைச் சுற்றியுள்ள சிறிய சந்திரன்களை கண்டுபிடித்து வருகிறோம்.  இச்சந்திரன்களின் சுற்றுப்பாதையை ஆராய்வதன் மூலம் அவற்றின் தோற்றம் மற்றும் சந்திரனின் சூழல் குறித்த தகவல்களை பெறலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!