அக்மாலின் இரட்டை பூஜ்ஜியங்களால் பாகிஸ்தான் இரசிகர்கள் அதிருப்தி

0 161

பாகிஸ்தான் அணிக்கு மீள்­வ­ருகை தந்­துள்ள உமர் அக்மால் தனது முத­லி­ரண்டு சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் முத­லா­வது பந்­தி­லேயே ஆட்டம் இழந்­ததை அடுத்து அதி­ருப்தி அடைந்த பாகிஸ்தான் இர­சி­கர்கள் டுவிட்­டரில் அவ­ருக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடையில் லாகூரில் நடை­பெற்ற சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் முத­லி­ரண்டு போட்­டி­க­ளிலும் உமர் அக்மால் முதல் பந்­து­க­ளி­லேயே களம் விட்­ட­கற்­றப்­பட்டார்.

மூன்று வரு­டங்­களின் பின்னர் பாகிஸ்­தானின் இரு­பது 20 அணியில் இடம்­பிடித்த அக்­மா­லினால் பிர­கா­சிக்க முடி­யாமல் போனமை கடும் விமர்­ச­னத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

முத­லா­வது போட்­டியில் முதல் பந்­தி­லேயே உமர் அக்மால் ஆட்­ட­மி­ழந்­ததை அடுத்து அவர் மீண்டு வருவார் என பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹ்மத் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் இரண்­டா­வது போட்­டி­யிலும் அக்மால் முத­லா­வது பந்­தி­லேயே ஆட்­ட­மி­ழந்தார்.

திங்­க­ளன்று நடை­பெற்ற போட்­டியில் முதல் பந்­தி­லேயே ஆட்­ட­மி­ழந்­தமை இர­சி­கர்கள் மத்­தியில் பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் அவர்கள் டுவிட்­டர்­களில் தங்­க­ளது மனக் கிலே­சங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

உமர் அக்­மாலை மீண்டும் இரு­பது 20 அணியில் இணைத்­தமை மகா பெரிய தவறு என இர­சி­கர்கள் கரு­து­கின்­றனர்.‘‘ஆற்­றல்­களை இழந்­து­போன பழைய (முன்னாள்) வீரர்­க­ளுக்கு எந்­த­ளவு சாத­க­மாக இருக்க முடியும்? அஹ்மத் ஷேஹ்ஸாத், உமர் அக்மால் ஆகி­யோ­ருக்கு தொடர்ந்தும் குரல்­கொ­டுப்­ப­வர்­களும் வெளி­யே­ற­வேண்­டித்தான் வரும். அவர்­களும் தேவைப்­ப­டா­த­வர்­களே’’ என இர­சிகர் ஒருவர் தனது டுவிட்­டரில் குறிப்­பிட்­டுள்ளார்.

இன்னும் சில இர­சி­கர்கள் டுவிட்­டரில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டுள்­ளனர்.‘‘இலங்கை மிகச் சிறப்­பாக விளை­யா­டி­யது. தமக்கு கொடுக்­கப்­பட்ட கட­மை­க­ளையும் இலங்­கையர் சிறப்­பாக செய்­து­மு­டித்­தனர்.

ஆனால், எப்­படி ஆரம்­பிப்­ப­து என்பதுதான் எனக்குப் புரி­ய­வில்லை. ஆனால், உமர் அக்­ம­லி­லி­ருந்து ஆரம்­பிக்­கின்றேன். அவர் ஏற்­க­னவே வெளி­யே­றி­யி­ருக்க வேண்டும்’.’’

‘‘சேர் உமர் அக்மால் மற்றும் அஹ்மத் ஷேஹ்ஸாத், உங்­களை நாங்கள் மீண்டும் பார்க்கத் தேவை­யில்லை.’’பாகிஸ்­தானின் முன்னாள் பயிற்­றுநர் மிக்கி ஆர்த்­த­ருடன் 2016இல் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக இரு­பது 20 அணி­யி­லி­ருந்து அக்­கமால் நீக்­கப்­பட்டார்.

அத்­துடன் அவ­ருக்கு மூன்று போட்டித் தடை­யுடன் 10,000 அமெ­ரிக்க டொலர் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.அதன் பின்னர் ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட அக்மால், பயிற்­றுநர் மிக்கி ஆர்த்தர் தன்னை தகாத வார்த்­தை­களால் திட்டியதாகக் குறிப்பிட்டார்.\

எவ்வாறாயினும் ஒழுக்க விதிகளின் மூன்று கோவைகளை உமர் அக்மால் மீறியதாகத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, குறிப்பாக அனுமதியின்றி ஊடகங்களுக்கு அவர் பேட்டி அளித்தமை மிகப் பெரிய தவறு என குறிப்பிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!