சர்வதேச இருபது 20இல் முதல்நிலை அணியான பாகிஸ்தானை முழுமையாக வெற்றிகொள்ளும் குறிக்கோளுடன் இலங்கை 

0 292

முத­லா­வது போட்­டியில் ஈட்­டிய வெற்­றி­யுடன் இரண்­டா­வது போட்­டி­யிலும் வெற்­றி­யீட்டி தொடரில் முன்­னிலை அடைய முயற்­சிப்போம் என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க கூறி­ய­தற்கு அமைய, திங்­க­ளன்று நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டி­யிலும் முதல் தர அணி­யான பாகிஸ்­தானை 35 ஓட்­டங்­களால் வெற்­றி­கொண்ட இலங்கை, 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரைத் தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது.

இந் நிலையில் லாகூரில் நடை­பெற­ வுள்ள மூன்­றா­வதும் கடை­சி­யு­மான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­யிலும் வெற்­றி­பெற்று பாகிஸ்­தா­னு­ட­னான தொடரை முழு­மை­யாகக் கைப்­பற்றும் குறிக்­கோ­ளுடன் இலங்கை அணி இன்று களம் இறங்­க­வுள்­ளது.

இதே­வேளை சக­ல­து­றை­க­ளிலும் பாகிஸ்தான் வீரர்கள் பிர­கா­சிக்கத் தவ­றி­ய­மையே முதல் இரண்டு போட்­டி­களில் தோல்வி அடை­வ­தற்குக் காரணம் என சுட்­டிக்­காட்­டிய புதிய பயிற்­றுநர் மிஸ்பா உல் ஹக், கடைசிப் போட்­டியில் மீண்­டெ­ழு­வது அவ­சியம் என்றார்.

கடாபி விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற போட்­டியில் 64 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டிக்­கொ­டுத்த அதே வீரர்­க­ளுடன் இரண்­டா­வது போட்­டி­யிலும் களம் இறங்கி 35 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டிய இலங்கை, இன்­றைய தினமும் பெரும்­பாலும் அதே வீரர்­க­ளுடன் களம் இறங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

தனுஷ்க குண­தி­லக்­கவும் (முத­லா­வது போட்டி), பானுக்க ராஜ­ப­க்ஷவும் (இரண்­டா­வது போட்டி) அரைச் சதங்கள் குவித்து இலங்கை அணியைப் பலப்­ப­டுத்­திய அதே­வேளை, பந்­து­வீச்­சா­ளர்­களும் துல்­லி­ய­மாக செயற்­பட்டு பாகிஸ்­தானை வீழ்த்­து­வ­தற்கு இலங்கை அணிக்கு பெரிதும் உத­வினர்.

இரண்­டா­வது போட்­டியில் பானுக்க ராஜ­ப­க்ஷவின் துடுப்­பாட்­டத்தைப் பெரிதும் பாராட்­டிய அணித் தலைவர் தசுன் ஷானக்க, இந்தத் தொட­ருக்குப் பின்னர் இளம் வீரர்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.

எனினும் சிரேஷ்ட வீரர்கள் இருப்­ப­தையும் நினை­வு­ப­டுத்­திய ஷானக்க, தெரி­வா­ளர்­களின் கைக­ளி­லேயே எல்லாம் தங்­கி­யி­ருக்­கின்­றது எனவும் குறிப்­பிட்டார்.
முதல் போட்­டியில் போன்றே இரண்­டா­வது போட்­டி­யிலும் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த இல­ஙகை 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்­கெட்டு­களை இழந்து 182 ஓட­்டங்­களைக் குவித்­தது.

பானுக்க ராஜ­பக்ஷ அபா­ர­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி 48 பந்­து­களை மாத்­திரம் எதிர்­கொண்டு 6 சிக்­சர்கள், 4 பவுண்ட்­றி­க­ளுடன் 77 ஓட்­டங்­களைக் குவித்தார்.அத்­துடன் 34 ஓட்­டங்­களைப் பெற்ற ஷெஹான் ஜய­சூ­ரி­ய­வுடன் 3ஆவது விக்­கெட்டில் 94 ஒட்­டங்­களை பானுக்க ராஜ­பக்ஷ பகிர்ந்தார்.

அணித் தலைவர் தசுன் ஷானக்­கவும் தனது பங்­குக்கு திற­மையை வெளிப்­ப­டுத்தி 27 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்தார்.
பாகிஸ்தான் பந்­து­வீச்சில் குறிப்­பிட்டு சொல்­லு­ம­ள­வுக்கு யாரும் பிர­கா­சிக்­க­வில்லை.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் முத­லா­வது போட்­டியில் போன்றே தடு­மாற்­றத்தை எதிர்­கொண்டு முதல் 5 விக்­கெட்­களை 52 ஒட்­டங்­களுக்கு இழந்­தது.

எவ்­வா­றா­யினும் ஆறா­வது விக்­கெட்டில் ஜோடி சேர்ந்த அசிவ் அலி (29), இமாத் வசிம் (47) ஆகிய இரு­வரும் 75 ஓட்­டங்­களைப் பகிர்ந்து பாகிஸ்­தானை ஓர­ளவு கௌர­வ­மான நிலைக்கு இட்டுச் சென்­றனர். ஆனால் அவர்­களால் இலங்கை அணியின் வெற்­றியைத் தடுக்க முடி­யாமல் போனது.

இவர்­களை விட அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹ்மத் 26 ஓட்­டங்­களைப் பெற்றார்.இலங்கை பந்­து­வீச்சில் நுவன் ப்ரதீப் 25 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.

இலங்கை அணியின் வெற்­றியில் திருப்­பு­மு­னை­யாக செயற்­பட்டு ஒரே ஓவரில் 3 விக்­கெட்­களைக் கைப்­பற்­றிய வனிந்து ஹச­ரங்க தனது 4 ஓவர்­களில் 38 ஒட்­டங்­களை மாத்­தி­ரமே கொடுத்தார்.ஆட்­ட­நா­யகன் விருது பானுக்க ராஜ­ப­க்ஷ­வுக்கு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!