சட்டவிரோத சுவ‍ரொட்டி, கட்அவுட்களை அகற்ற 1,045 தொழிலாளர்கள்: செலவுகளுக்காக 4.58 கோடி ரூபா ஒதுக்கீடு

0 102

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தேர்தல் சட்டத்துக்கு புறம்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், பெனர்கள் மற்றும் கட்அவுட்களை அகற்றுவதற்காக 1,045 தொழிலாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இவர்ளை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் இதற்காக 4.58 கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!