இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போர் விமானத்துக்கு எழு­மிச்சை பழம் வைத்து பூஜை செய்த அமைச்சர்

0 218

பிரான்­ஸி­ட­மி­ருந்து இந்­தியா கொள்­வ­னவு செய்யும் ரஃபேல் போர் விமா­னங்­களில் முத­லா­வது விமானம் இந்­தி­யா­விடம் நேற்று ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

பிரான்ஸில் இந்­திய பாது­காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்­வி­மா­னத்தை பெற்­றுக்­கொண்டார். பிரான்ஸின் போடோ நக­ருக்கு அரு­கி­லுள்ள மெரிக்னாக் விமானப் படை தளத்தில் அமைச்சர் ராஜ்­நாத்சிங் இந்த போர் விமா­னத்தை முறைப்­படி பெற்றுக் கொண்­டார்.

இதற்­காக 3 நாள் பய­ண­மாக பிரான்ஸ் சென்று அவர், பாரீஸ் நகரில் பிரான்ஸின் ஜனா­தி­பதி இமா­னுவேல் மெக்­ரானை சந்­தித்து பேசினார். போடோ நகரில் ரஃபேல் விமா­னத்தை இந்­தி­யா­விமட் ஒப்­ப­டைக்கும் நிகழ்வில் பிரான்ஸின் பாது­காப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, ரஃபேல் விமா­னத்தை தயா­ரிக்கும் தசோல்ட் நிறு­வ­னத்தின் தலைவர் எரிக் ட்ரப்பீர் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

பிரான்ஸ் நாட்­டிடம் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமா­னங்­களைப் பெற பிர­தமர் மோடி தலை­மை­யி­லான பாஜக அரசு 2016-ல் ஒப்­பந்தம் செய்­தது. பிரான்சில் தயா­ரிக்­கப்­பட்ட முதல் ரஃபேல் போர் விமானம், விஜ­ய­த­சமி நாளான இன்று அதி­கா­ரப்­பூர்­வ­மாக இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

பிரான்­ஸிடம் இருந்து 63,460 கோடி இந்­திய ரூபா செலவில் 36 ரஃபேல் ரக போர் விமா­னங்­களை வாங்க பிர­தமர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு 2016 ஆம் ஆண்டு ஒப்­பந்தம் செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ரஃபேல் விமா­னத்­துக்கு பூஜை செய்த அமைச்சர் ராஜ்நாத் சிங்!நேற்று முத­லா­வது ரஃபேல் போர் விமா­னத்தைப் பெற்­றுக்­கொண்ட இந்­திய பாது­காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அவ்­வி­மா­னத்­துக்கு சந்­தனம், குங்­கு­மத்தில் பொட்­டு­வைத்து, ஓம் என்று எழுதி, நான்கு சக்­க­ரங்­க­ளிலும் எழு­மிச்சை பழம் வைத்து பூஜை செய்தார்.

இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இந்­திய இரா­ணு­வத்­துக்கு இது வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க நாள். இந்­தி­யா-­பி­ரான்­ஸுக்கு இடை­யி­லான ஒப்­பந்­தத்தில் இது ஒரு மைல்கல்.

குறிப்­பிட்ட கால­நிர்­ண­யத்தை, தசோல்ட் நிறு­வனம் மிகச் சரியாக பின்பற்றியது அவர்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் விமானங்கள் எமது நாட்டுக்கு வலிமையை ஏற்படுத்தியுள்ளது’ எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!