நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியன்

0 48

(எம்.ஐ.எம்.றியாஸ்)

அட்­டா­ளைச்­சேனை கோணா­வத்தை கோல்டன் பெளண்­டேஷன் நடாத்­திய கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் அட்­டா­ளைச்­சேனை நியூ ஸ்டார் விளை­யாட்டுக் கழகம் சம்­பி­ய­னா­கி­யது.

 

அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள 30 முன்­னணிக் கழ­கங்கள் பங்கு கொண்ட இச் சுற்றுப் போட்டி அணிக்கு 8 பேரையும் 5 ஓவர்­க­ளையும்  கொண்­ட­தாக நடத்­தப்­பட்­டது.

அட்­டா­ளைச்­சேனைப் பொது விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்ற இச் சுற்றுப் போட்­டியின் இறுதி ஆட்­டத்தில்  அக்­க­ரைப்­பற்று ஏ.சீ.சீ.  கழ­கத்தை 4 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்டு அட்­டா­ளைச்­சேனை நியூ ஸ்டார் விளை­யாட்டுக் கழ­கமும் சம்­பியன் பட்­டத்தை சூடி­யது.

 

இறுதிப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட  அழைக்­கப்­பட்ட ஏ.சீ.சீ. அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 5 ஓவர்­களில் 3 விக்­கெட்­களை இழந்து 58 ஓட்­டங்­களைப் பெற்­றது..

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ ஸ்டார் அணி 4.4ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து 59 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்டி சம்­பி­ய­னா­னது.

 

இச் சுற்றுப் போட்­டியில் சிறந்த வீர­ராக தெரி­வான ஏ.சீ.சீ. அணியின்  பெரோ­ஸுக்கு கிண்­ணத்­துடன் 15,000 ரூபா பணப்­பரிசும் இறுதி ஆட்ட நாய­க­னாகத் தெரி­வான நியு ஸ்டார் அணியின் நௌசாத்­துக்கு கிண்­ணமும் வழங்கி வைக்­கப்­பட்­டன.

இச் சுற்றுப் போட்­டியில் சம்­பி­ய­னான நியு ஸ்டார் கழ­கத்­துக்குவெற்றிக் கிண்­ணத்­துடன் 16 ஆயிரம் ரூபா பணப்­ப­ரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஏ.சி.சி. அணிக்கு கிண்­ணத்­துடன் 11 ஆயிரம் ரூபா பணப்­ப­ரிசும் வழங்­கப்­பட்­டன.

நுகர்வோர் அதிகார சபை யின் நிறைவேற்றுப் பணிப் பாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!