மீள்வருகையில் ஜோகோவிச் சம்பியனானார் தியெமுக்கு சீன பகிரங்க டென்னிஸ் பட்டம்

0 57

டோக்­கி­யோவில் கோட்­டோவில் அமைந்­துள்ள ஏரியேக் டென்னிஸ் அரங்கில் ஞாயி­றன்று நிறை­வு­பெற்ற ஜப்பான் பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் ஆடவர் ஒற்­றையர் பிரிவில் முதல் நிலை வீரர் நொவாக் ஜோகோவிச் சம்­பி­ய­னானார்.

நொவாக் ஜோகோவிச், ஜோன் மில்­மனை

 

ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் நான்­கா­வது சுற்­றின்­போது உபா­தைக்­குள்­ளா­னதால் போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கிக்­கொண்ட ஜோகோவிச் மீள்­வ­ரு­கையில் விளை­யா­டிய முதல் போட்­டி­யி­லேயே சம்­பியன் பட்­டத்தை வென்றார்.

அவுஸ்­தி­ரே­லிய வீரர் ஜோன் மில்­மனை 2 நேர் செட்­களில் (6 – 3, 6 – 2) வீழ்த்­திய 31 வய­தான ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்­கையில் 76ஆவது சம்­பியன் பட்­டத்தை வென்­றெ­டுத்தார்.

சீன பகி­ரங்க டென்­னிஸ்ஸில் தியெம் சம்­பி­ய­னானார்பெய்­ஜிங்கில் நடை­பெற்ற சீன பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் ஆண்­க­ளுக்­கான ஒற்­றையர் சம்­பியன் பட்­டத்தை டொமினிக் தியெம் சுவீ­க­ரித்தார்

கிரேக்க வீரர் ஸ்டெபானொஸ் சிட்­சி­பா­ஸிடம் கடும் சவாலை எதிர்­கொண்ட ஆஸ்­தி­ரிய வீரர் தியெம் 2 – 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்றார்.

முத­லா­வது செட்டில் சிட்­சி­பா­ஸிடம் 3–6 என தோல்வி அடைந்த தியெம், அடுத்த இரண்டு செட்களிலும் முறையே 6–4, 6–1 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!