பூஜித், ஹேமசிறியை மீண்டும் கைது செய்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

0 158

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ‍‍ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை  கைதுசெய்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம நீதிவானினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்  இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

உரிய தகவல்கள் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதமையினால் பாரிய உயிரிழப்புக்கு காரணமாகியதாக, படுகொலைக் குற்றச்சாட்டில் இவ்விருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பரிசீலனை செய்த கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்ன, மேற்படி சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிவானின் இந்த பிணை உத்தரவுக்கு எதிராக  சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேல் நீதிமன்றம், கொழும்பு பிரதம நீதிவானின் பிணை உத்தரவை ரத்து செய்து சந்தேகநபர்களை மீண்டும் கைது‍‍ செய்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!