தோல்வி அடையாத அணியாக இறுதியில் அமேஸன் வொரியர்ஸ் இரண்டாவது தகுதிகாணில் ட்ரைடென்ட்ஸ், நைட் ரைடர்ஸ்

0 33

கரி­பியன் ப்றீமியர் லீக் கிரிக்­கெட்டின் ஏழா­வது அத்­தி­யா­யத்தில் தோல்­வி­ய­டை­யாத அணி என்ற சிறப்­புடன் கயானா அமேஸன் வொரியர்ஸ் இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யுள்­ளது.

இதே­வேளை, நீக்கல் போட்­டியில் வெற்­றி­யீட்­டிய ட்ரின்­பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இலங்­கையின் சிக்­குகே பிர­சன்ன இடம்­பெ­று­கின்­றமை சிறப்­பம்­ச­மாகும்.

இரண்டு கட்­டங்­களைக் கொண்ட லீக் சுற்­றுக்­களில் சகல போட்­டி­க­ளிலும் வெற்­றி­யீட்­டிய  ஷொயெப் மாலிக் தலை­மை­யி­லான கயானா அமேஸன் வொரியர்ஸ் முத­லா­வது தகு­திகாண் (அரை இறுதி) போட்­டியில் பார்­படஸ் ட்ரைடென்ட்ஸ் அணியை 30 ஓட்­டங்­களால் வெற்­றி­கொண்டு எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­ பெற்­றது.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த கயானா அமேஸன் வொரியர்ஸ் அணி, ப்ரெண்டன் கிங் குவித்த அபார சதத்தின் (132)  உத­வி­யுடன் 3 விக்­கெட்­களை மாத்­திரம் இழந்து 218 ஓட்­டங்­களைக் குவித்­தது. அணித் தலைவர் ஷொயெப் மாலிக் 32 ஓட்­டங்­களைப் பெற்றார். பந்­து­வீச்சில் ஹேடன் வோல்ஷ் 42 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களை வீழ்த்­தினார்.

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பார்­படஸ் ட்ரைடென்ட்ஸ் 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­களை இழந்து 188 ஓட்­டங்­களைப்  பெற்று 30 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­வி­யது.

நீக்கல் அணிக்­கான போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சென் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பெட்­ரியொட்ஸ் அணி 20 ஓவர்­களில் 7 விக்­கெட்­களை இழந்து 125 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.

துடுப்­பாட்­டத்தில் லோரி இவேன்ஸ் 55 ஓட்­டங்­களை அதி­க­பட்­ச­மாக பெற்றார். பந்­து­வீச்சில் கிறிஸ் ஜோர்டன் 30 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் சுனில் நரைன் 10 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் அலி கான் 22 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

பந்­து­வீச்சில் இலங்­கையின் சிக்­குகே பிர­சன்ன 2 ஓவர்­களை வீசி விக்கெட் எத­னையும் கைப்­பற்­றா­த­போ­திலும் 7 ஓட்­டங்­களை மாத்­திரம் விட்­டுக்­கொ­டுத்தார்.

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய ட்ரின்­பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.4 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை மாத்­திரம் இழந்து 127 ஓட்­டங்­களைப் பெற்று 6 விக்­கெட்­களால் வெற்­றி­யீட்­டி­யது. துடுப்­பாட்­டத்தில் லெண்ட்ல் சிம்மன்ஸ் (55), தினேஷ் ராம்டின் (32), கீரன் பொலார்ட் (26) ஆகியோர் பிர­கா­சித்­தனர்.

பார்படன்ஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும்  ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டி நாளை நடைபெறவுள்ளது. (எம்.எம்.எஸ்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!