பாகிஸ்தானின் 2 அடி உயரமான போபோவுக்குத் திருமணம்; ஒஸ்லோவில் திருமண வரவேற்பு வைபவம்

0 1,030

பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு அடி உயரமே கொண்ட தொழிலதிபர் புர்ஹான் சிஷ்டி என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அண்மையில் நடைபெற்றது.

போலியோ பாதிப்புக்குள்ளாகி, வீல் சேரில் வாழ்ந்து வரும் சிஷ்டி, போபோ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

மாற்றுத்திறனாளியாக இருந் தாலும், பல்வேறு தொழில்களை தொடங்கி, வெற்றிகரமான தொழில திபராக விளங்கு கிறார் போபோ. தனது உடல் குறைபாட்டையும் தாண்டி மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இவர் பௌஸியா எனும் யுவதியை திருமணம் செய்துகொண்டார். ஒஸ்லோவில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு பைவத்துக்கு 13 நாடுகளிலிருந்து போபோவின் நண்பர்கள், ஆதரவாளர்கள் வந்திருந் தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!