அயர்லாந்து சார்பாக இருபது 20இல் கெவின் முதலாவது சதம் குவித்தார்

0 148

பெங்­க­ளூரில் எட்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் அதி­ரடி சதத்தின் மூலம் இங்­கி­லாந்தை கதி­க­லக்கி தோல்வி அடையச் செய்த கெவின் ஓ’ப்­றயன், சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அரங்கில் சதம் குவித்த முத­லா­வது அயர்­லாந்து வீரர் என்ற பெரு­மையைப் பெற்றார்.

அல் அமி­ராத்தில் நடை­பெற்­று­வரும் ஓமான் ஐங்­கோண சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரில் ஹொங் கொங்­குக்கு எதி­ரான போட்­டி­யி­லேயே கெவின் ஓ’ப்­றயன் சதம் குவித்தார்.

கெவின் ஓ”பற்யன் குவித்த சதத்தின் உத­வி­யுடன் ஹொங்­கொங்கை 66 ஓட்­டங்­களால் அயர்­லாந்து வெற்­றி­பெற்­றது.இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அயர்­லாந்து 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­களை இழந்து 208 ஓட்­டங்­களைக் குவித்­தது.

ஆரம்ப வீரர்­க­ளான கெவின் ஓ’ப்­றயன் 124 ஓட்­டங்­க­ளையும் போல் ஸ்டேர்லிங் 36 ஓட்­டங்­க­ளையும் பெற்­ற­துடன் 8.2 ஓவர்­களில் 80 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அணியைப் பலப்­ப­டுத்­தினர்.

அத்­துடன் வெறும் 8 ஓட்­டங்­களைப் பெற்ற மார்க் அடெ­யா­ருடன் 4ஆவது விக்­கெட்டில் கெவின் ஓ’ப்­றயன் 50 ஓட்­டங்­களைப் பகிர்ந்­த­மையும் சிறப்­பம்­ச­மாகும்.

பந்­து­வீச்சில் எஹ்சான் கான் 32 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் கெகய்ல் கிறிஸ்டி 33 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர். பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய ஹொங்கொங் 20 ஓவர்­களில் 9 விக்­கெட்­களை இழந்து 142 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று தோல்வி அடைந்­தது.

ஹொங்கொங் துடுப்­பாட்­டத்தில் ஹறூன் அர்ஷாத் 45 ஓட்­டங்­க­ளையும் எஹ்சான் கான் ஆட்­ட­மி­ழக்­காமல் 28 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

பந்­து­வீச்சில் பொய்ட் ரென்கின் 21 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்கெட்களையும் ஸ்டுவர்ட் தொம்சன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெரத் டிலேனி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!