ஆஸி. இ20 குழாத்தில் மீண்டும் ஸ்மித், வோர்னர்

0 32

சொந்த நாட்டில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள ஆடவர் ஐ.சி.சி. உலக இரு­பது 20  கிரிக்கெட் கிண்­ணத்தை மனத்தில் நிறுத்தி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுடன் இவ் வருடம் நடை­பெ­ற­வுள்ள ஆறு சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கு­ரிய 14 வீரர்­களைக் கொண்ட இரு­பது 20 கிரிக்கெட் குழாத்தை அவுஸ்­தி­ரே­லியா பெய­ரிட்­டுள்­ளது.

அண்­மையில் நடந்­து­மு­டிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அதி சிறந்த வீர­ராகத் தெரி­வான ஸ்டீவன் ஸ்மித், மூன்று வரு­டங்­களின் பின்னர் அவுஸ்­தி­ரே­லிய இரு­பது 20 குழாத்தில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

டெஸ்ட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் ஆகிய இரண்டு வகை கிரிக்கெட் போட்­டி­களில் திற­மை­சா­லி­யான 30 வய­து­டைய ஸ்டீவன் ஸ்மித், சரவ்­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தனது திற­மையை வளர்த்­துக்­கொள்ள இது ஒரு சிறந்த சந்­தர்ப்­ப­மாகும்.

ஸ்மித்தை விட ஆரம்ப அதி­ரடி வீரர் டேவிட் வோர்னர், இட­துகை வேகப்­பந்­து­வீச்­சாளர் மிச்செல் ஸ்டார்க் ஆகி­யோரும் குழாத்தில் இனைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். ஆனால், முன்­வ­ரிசை வீரர் உஸ்மான் கவா­ஜா­வுக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.

‘‘இன்னும் ஒரு வருட காலத்தில் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களை அவுஸ்­தி­ரே­லியா அரங்­கேற்­ற­வுள்­ளது.

இதனை மனத்தில் நிறுத்­தியே 14 வீரர்கள் கொண்ட குழாத்தை தெரி­வு­செய்­துள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய தேசிய அணி தெரி­வாளர் ட்ரவோ ஹோர்ன்ஸ் தெரி­வித்தார்.

இந்­தி­யா­வுடன் நடை­பெற்ற இரு­பது 20 கிரிக்கெட் தொடரில் விளை­யா­டிய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஷோன் மார்ஷ், டி’ஆர்சி ஷோர்ட், ஜய் ரிச்­சர்ட்சன், பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப், நதன் கூல்டர் நைல், நேதன் லயன் ஆகி­யோரை தெரி­வா­ள­ரகள் கருத்தில் கொள்­ள­வில்லை.

உள்ளூர் போட்­டி­களில் பிரா­கா­சித்­து­வரும் பென் மெக்­டமட், கேன் ரிச்­ரட்சன், பில்லி ஸ்டன்லேக் ஆகியோர் மீண்டும் குழாத்தில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

அவுஸ்­தி­ரே­லிய குழாம்: ஆரொன் பின்ச் (அணித் தலைவர்), ஏஷ்டன் அகார், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ், க்ளென் மெக்ஸ்வெல், பென் மெக்­டமட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டன்லேக், மிச்செல் ஸ்டார்க், ஏஷ்டன் டேர்னர், அண்ட்றூ டை, டேவிட் வோர்னர், அடம் ஸம்ப்பா.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!