மொழி வித்தியாசம் இருந்தாலும் நடிப்பு ஒன்றுதான் -அனு இமானுவேல்

0 179

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ‘மயிலாஞ்சி…’யாக டூயட் ஆடியவர் அனு இமானுவேல். அனு, பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவிலாம்.

அவரிடம் பேசி­ய­போது, ‘‘தமிழ்ல ஒரு பிராப்பர் கொமர்ஷியல் என்டர்டெயினருக்காக காத்திருந்தேன். வெயிட்டிங் வீணாகலை.

பாண்டிராஜ் சார், சிவகார்த்திகேயன் காம்பினேஷன்ல ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ கிடைச்சது. ரொம்ப பெரிய ஃபேமிலில ஒருத்தியா நடிச்ச ஃபீல் இருக்கு.

 ஐஸ்வர்யா அவ்ளோ ஸ்வீட்டா பழகினாங்க. குற்றாலம், தென்காசினு குளிர்ச்சியான இடங்கள்ல நடிச்சது ஹேப்பி மொமன்ட்ஸ்.

சிவாவோட கிராண்ட் சப்போர்ட்டுக்கு எப்பவும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லலாம்.

பாண்டிராஜ் சார் இயக்கத்துல ஒர்க் பண்ணினது சந்தோஷமா இருக்கு.

அனுவோட ஹிஸ்ட்ரியை தெரிஞ்சுக்கலாமா?
பூர்வீகம் மலையாளினாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்கால.

டெக்ஸாஸில்தான் ஸ்கூல் படிப்பு. எங்க பெமிலில சினிமாவுல யாருமில்ல.

ஆனா, அமெரிக்கால ஒவ்வொரு வெள்ளியும் ரிலீஸ் ஆகற இந்தியப் படங்களை மிஸ் பண்ணாமப் பார்த்து ரசிப்போம்.

மலையாளம், தமிழ்ப் படங்கள் ஃபேவரிட். லாங்குவேஜ் தெரியலைனாலும் படத்தை புரிஞ்சுக்குவேன்.

சின்னப் பொண்ணா இருந்தப்ப ெமாடலிங்குக்கும் ஃபிலிம் இண்டஸ்ட்ரிக்கும் வித்தியாசம் தெரியாது.

எங்க அப்பா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். நான் ெமாடலிங் பண்ணப்போறேன்னு சொன்னதும், ெஷாக் ஆகிட்டார்.

‘ெமாடலிங் ஃபீல்டுல என்னவாகப் போறே’னு கேட்டார். அதுல நிறைய டிபார்ட்மென்ட்ஸ் இருக்குனு கூட எனக்குத் தெரியாது.

ஆனா, அஸின் மாதிரி ஆகணும்னு சொன்னேன். வீட்ல சிரிச்சாங்க. ‘அஸின் ஒரு ஆக்ட்ரஸ். ஆக்ட்டிங் வேற, ெமாடலிங் வேற’னு சொல்லி புரியவச்சாங்க!அப்புறம் நான் காலேஜ் சேர்ந்தேன்.

சைக்காலஜி முதலாமாண்டு படிக்கும்போதே, மல்லுவுட்ல இருந்து ஜெயராம் சார் நடிச்ச ‘ஸ்வப்னசஞ்சரி’ ஆஃபர் வந்துச்சு.

நடிப்பா படிப்பானு இங்கி பிங்கி பாங்கி போட்டு பார்த்ததில், படிப்பை எப்ப வேணா படிக்கலாம்.

ஆனா, எக்ட்டிங் வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கணும்னு முடிவு பண்ணினேன். சினிமாவில் அறிமுகமானேன்.

சினிமாவுல ஒரு சீன்ல நடிக்கறவங்க அதை அஞ்சே அஞ்சு நிமிஷத்துல நடிச்சு முடிச்சிடுவாங்கனு நினைச்சிருந்தேன்.

ஆனா, அந்த ஃபைவ் மினிட்ஸ் சீனுக்கு எவ்ளோ டேக்ஸ் எடுப்பாங்க, ஒரு ஆக்ட்ரஸுக்கு பொறுமை எவ்வளவு அவசியம்னு எல்லாம் இண்டஸ்ட்ரிக்கு வந்தபிறகுதான் புரிஞ்சுக்கிட்டேன்.

முதல் படம் நடிச்ச பிறகு, படிப்பில் கவனம் செலுத்தினேன்.

சைக்காலஜியைத் தொடர்ந்தேன். நிவின் பாலியின் ‘எக் ஷன் ஹீரோ பிஜூ’ ஆஃபர் வந்தது. அதன் பிறகு டோலிவவூட் ஆஃபர்.

நானி நடிச்ச ‘மஜ்னு’ மூலம் அங்க என்ட்ரி ஆனேன். என் நேரம்… டோலிவூட்ல பிஸியானேன்.‘

தமிழ்ல ஏன் உங்கள பார்க்க முடியல? டோலிவூட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீங்களா’னு சிலர் கேட்குறாங்க. அப்படியெல்லாம் இல்ல. டோலிவூட்ல நல்ல ஆஃபர்ஸ் வருது. அவ்ளோதான்.

மூணு இண்டஸ்ட்ரீல நடிக்கிறீங்களே…
ஆமா. மல்லுவூட், கோலிவூட், டோலிவூட்னு மூணு இண்டஸ்ட்ரீயில் நடிச்சாலும் லெங்குவேஜ் மட்டும்தான் வித்தியாசமா இருக்கு.

மத்தபடி வோர்க்கிங் ஸ்டைல், மேக்கிங்ல எந்த வித்தியாசமும் தெரியல. ஆனா என்ன! டெக்னீஷியன்ஸ் வேற வேற ஆளா இருக்காங்க. மத்தபடி நடிப்பு ஒண்ணுதான்.ஒரு படத்தை செலக்ட் பண்றதுக்கு முன்னாடி சில விஷயங்கள் யோசிப்பேன்.

இந்தப் படம் ஆடியன்ஸுக்கு பிடிக்குமா? ஸ்கிரீன்ல என்னோட பிரசன்ஸ் எப்படி இருக்கும்? க்ளாமர் பங்கு என்ன?
நல்ல பெனரா… ஹீரோ, டைரக்டர்னு எல்லாம் பார்த்தாலும், ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஏன்னா, ஒரு நல்ல டீம் சேர்ந்தால்தான் படம் சிறப்பா வரும்.

‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில கலகலனு இருக்கீங்க. நிஜ அனு எப்படி?
ரொம்ப ரிசர்வ்டு பர்சன். அதிகம் பேசமாட்டேன்.

என்னோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளும் ரொம்ப ரொம்ப குறைவு.

ஆரம்பத்துல அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த புதுசுல ஒருசில மலையாள ஃப்ரெண்ட்ஸ்தான் இருந்தாங்க.

இப்ப அந்த எண்ணிக்கை கொஞ்சூண்டு கூடியிருக்கு.

தமிழ்ல எப்ப சரளமா பேசுவீங்க?
சீக்கிரமே! தெலுங்கில் ஓரளவு பேச ஆரம்பிச்சிட்டேன்.

பவன் கல்யாண் சாரோட ‘அஞ்ஞாதவாசி’ல முதன் முதலா டப்பிங் பேசி சாதனை பண்ணிட்டேன்.

தமிழ் ஓரளவு புரியும். கொஞ்சம் பேசுறேன்.

ஆனா, அடுத்தமுறை கண்டிப்பா முழுக்க முழுக்க தமிழ்ல பேசுவேன்! அதுக்கு நான் கேரண்டி!

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!